நிலக்கரி அமைச்சகம்

வர்த்தக நிலக்கரிச் சுரங்க வேலைகள் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை சத்திஸ்கரில் தொடங்கி வைக்கும்: பிரகலாத் ஜோஷி

Posted On: 31 JUL 2020 5:58PM by PIB Chennai

வணிக நிலக்கரிச் சுரங்க வேலைகளின் தொடக்கம் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான புதிய சகாப்தத்தை சத்திஸ்கரில் தொடங்கி வைக்கும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி கூறினார். சத்திஸ்கருக்கு பயணம் மேற்கொண்ட திரு ஜோஷி ஊடகங்களிடம் பேசுகையில், அம்மாநிலத்தின் மக்களுக்கு 60,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்று தெரிவித்தார். வணிக நிலக்கரி சுரங்கப் பணிகளின் கீழ் வருடத்துக்கு ரூ 4,400 கோடி வருவாயும், கூடுதல் குறைந்தபட்சத் தொகையாக ரூ 2,000 கோடியும் மாநிலத்துக்கு கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார். கூடுதலாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டக் கனிம அமைப்பு நிதியங்களுக்கு சுமார் ரூ. 25 கோடியை வணிக நிலக்கரிச் சுரங்கப் பணிகள் அளிக்கும். இதை நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றியுள்ளப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

மாநிலத்தின் வர்த்தக நிலக்கரி ஏலங்களின் கீழ் கொண்டு வரப்பட்ட 3 புதிய சுரங்கங்களுடன் 5 சுரங்கங்களை மாற்றும் படி சத்திஸ்கர் அரசிடம் இருந்து வந்த ஆலோசனையை நிலக்கரி அமைச்சகம் ஏற்றுக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்.மாநிலத்தில் உள்ள 9 சுரங்கங்கள் தற்சமயம் வர்த்தக ஏலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

 

சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டின் (SECL) செயல்பாட்டை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். கோவிட் நெருக்கடியின் போது நிலக்கரி வீரர்கள் செய்த கடினமான வேலையை அவர் அங்கீகரித்தார். கடற்பாசி இரும்பு மற்றும் எஃகுத் தொழில்களின் பிரதிநிதிகளுடன் அவர் உரையாடினார்.

 

வளர்ந்து வரும் நிலக்கரித் தேவைகளுக்கான நிலக்கரியை எடுத்து செல்லுதலில் எதிர்கொள்ளப்படும் போக்குவரத்து சவால்களை சமாளிப்பதையும், பிராந்தியத்துக்கு பயணிகள் ரயில் போக்குவரத்தை வழங்குவதையும் சத்திஸ்கர் கிழக்கு ரயில்வேயின் (CERL) ரயில் பாதை கருத்தில் கொண்டுள்ளது.


 

 

***



(Release ID: 1642650) Visitor Counter : 158


Read this release in: English , Hindi , Punjabi , Kannada