சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
திறன் குறைபாடு உடையவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான துறை, சமூக நீதி, அதிகாரம் ஆகிய துறைகளுக்கான அமைச்சகம் ஆகியவை, உடல்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்காக உதவி தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2020 8:42PM by PIB Chennai
திறன் குறைபாடு உடையவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான துறை, சமூக நீதி, அதிகாரம் ஆகிய துறைகளுக்கான அமைச்சகம் ஆகியவை, உடல்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தீர்வு காண்பதற்காகவும், அவர்களுடைய நல் வாழ்விற்காகவும், நாட்டின் வளர்ச்சியில் அவர்களையும் இணைத்துக் கொண்டு திறம்பட செயல்படுவதற்காகவும் பல்வேறு அமைப்புகளின் மூலம் பாடுபட்டு வருகின்றன. உடல் திறன் குறைபாடு உடையவர்களுக்கு பல்வேறு உதவிப் பொருட்கள் கிடைத்தல், உதவிப் பொருட்களைப் பழுது பார்த்தல் பற்றிய தகவல்களை அளிப்பதற்காக உதவி தொடர்பு சேவை ஒன்றை செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் கழகம் (ஏ எல் ஐ எம் சி ஓ) தொடங்கியுள்ளது. இதேபோல் சலுகை வட்டி விகிதத்தில், உடல் திறன் குறைபாடு உடையவர்களுக்கு கடன் வழங்கி வருகிற உடல் ஊனமுற்றோருக்கு திறன் பயிற்சித் திட்டங்களை நடத்துகின்ற தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி வளர்ச்சிக்கழகம் (என் ஹெச் எஃப் டி சி) இவை குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக உதவி தொடர்பு சேவைகளைத் தொடங்கியுள்ளது. தேசிய அமைப்புகளில் ஒன்றான செகந்திராபாத்தில் உள்ள, அறிவுத்திறன் குறைபாடுடையவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான தேசிய அமைப்பு (என் ஐ இ பி ஐ டி) சிறப்பு கல்வி, தொழில்சார் சிகிச்சை முறைகள் இவை தொடர்பான பிரச்னைகள் ஆகியவை குறித்து தகவல்கள் பெறுவதற்கென, இதற்கென தனியாக அர்ப்பணிக்கப்பட்ட கட்டணமில்லா தொலைத் தொடர்பு எண் சேவையை வழங்கி வருகிறது.
இவை தவிர மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும், நாட்டின் முன்னணி சுகாதார அமைப்புக்களில் ஒன்றான, தில்லியில் உள்ள, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அமைப்பும், மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான உதவி தொடர்பு சேவையை அளித்து வருகிறது. மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளின் உதவி தொடர்பு எண்களைப் பற்றி பரவலாக விளம்பரப்படுத்துவதற்காக உடல் திறன் குறைபாடு உடையவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான துறை 23.7.2020 முதல் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சி மூலமாக விளம்பரம் செய்து வருகிறது. அமைப்புகளும் அவற்றின் மூலமாக வழங்கப்படும் தொலைபேசி உதவி சேவை எண்களும் பின்வருமாறு:
|
DEPwD துறையின் கீழான அமைப்பு
|
உதவி எண்
|
நோக்கம்
|
நேரம்
|
|
அறிவுத்திறன் குறைபாடுடையவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான தேசிய அமைப்பு என் ஐ இ பிஐடி
செகந்திராபாத்
|
18005726422
|
பின்வரும் தகவல்களை அளிப்பது :-
1. மனநலம் தொடர்பான பிரச்னைகள்
2. சிறப்பு கல்வி
3. தொழில்சார் சிகிச்சை முறை
4. தொழிற்கல்வி ஆலோசனை
5. பேசுவதற்கான சிகிச்சை
6. முடநீக்கியல் மருத்துவம்
|
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
|
|
செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் கழகம் (ஏ எல் ஐ எம் சி ஓ)
|
18001805129
|
உடல் திறன் குறைபாடு உடையவர்களுக்கு உதவும் பொருட்கள், உதவிக்கான கருவிகள்
|
காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை
|
|
தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி வளர்ச்சிக்கழகம் என் ஹெச் எஃப் டி சி)
|
1800114515
|
a) கடன் திட்டங்கள் பற்றிய தகவல் மற்றும் வழிகாட்டுதல்
b) திறன் பயிற்சி பெறுவது குறித்த தகவல் மற்றும் வழிகாட்டுதல்
c) உதவித் தொகை திட்டம் பற்றிய தகவல்
d) திவ்யாங்கன் சுவாவலம் பன் திட்டம் பற்றிய தகவல்
e) விஷேஸ் நுண் கடன் திட்டம் பற்றிய தகவல் மற்றும் வழிகாட்டுதல்
|
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை
|
|
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்),தில்லி
|
1800117776
|
மன இறுக்க நோய் அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், புரிந்து கொள்வதற்காகவும் பெற்றோருக்கு உதவி
|
24x7
|
உடல் திறன் குறைபாடுடைய எந்த ஒரு நபரும் அந்தந்தத் துறைகள் தொடர்பான தகவல்களையும், தேவைகளையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
*****
(
(வெளியீட்டு அடையாள எண்: 1642345)
வருகையாளர் எண்ணிக்கை : 154