பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை அகாடமியின் கமாண்டண்ட் ஆக வைஸ் அட்மிரல் மா ஹம்பிஹோலி AVSM, NM பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
27 JUL 2020 5:45PM by PIB Chennai
இந்தியக் கடற்படை அகாடமியின் கமாண்டண்ட் ஆக வைஸ் அட்மிரல் மா ஹம்பிஹோலி AVSM, NM -யிடம் வைஸ் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி AVSM, NM பொறுப்புகளை இன்று 2020 ஜூலை 27 திங்கள்கிழமை ஒப்படைத்தார். அவர் 13 மாத காலம் இப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் மா ஹம்பிஹோலி, வெலிங்டன் பாதுகாப்புச் சேவைகள் அலுவலர் கல்லூரி, காடக்வசலா தேசியப் பாதுகாப்பு அகாடமி, கரஞ்சா கடற்படைப் போர்ப் பயிற்சிக் கல்லூரி மற்றும் சிறப்புமிக்க புதுடெல்லி தேசிய ராணுவக் கல்லூரியில் பயின்றவர். இவர் நீர்மூழ்கிப் போர் உத்திகளில் நிபுணத்துவம் பெற்றவர். அந்தப் பிரிவில் பணியாற்றியவர்.
2019 மார்ச் 27இல் வைஸ் அட்மிரல் ஆக பதவி உயர்வு பெற்ற முதன்மை அதிகாரி அந்தஸ்தில் உள்ள இவர், எழிமலாவில் உள்ள தேசியக் கடற்படை அகாடமியின் எட்டாவது கமாண்டண்ட் ஆக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கடற்படை செயல்பாடுகள் பிரிவு தலைமை இயக்குநராக இருந்தார். இவர் சிறப்பாகக் கடமை ஆற்றியமைக்காக நவோ சேனா விருதும், அதிவிசிஷ்ட் சேவா பதக்கமும் பெற்ற அதிகாரியாவார்.
(रिलीज़ आईडी: 1641632)
आगंतुक पटल : 311