பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

“வெளிப்படும் வட-கிழக்கு இந்தியா: கைவினைப் பொருள்களில் திட்டமிட்ட மற்றும் வளர்ச்சிக்கான அவசியம்” என்ற தலைப்பில் ஷில்லாங் ஐ.ஐ.எம். ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கை திரு.அர்ஜுன் முன்டா தொடங்கிவைத்தார்.

Posted On: 24 JUL 2020 3:46PM by PIB Chennai

ஷில்லாங் இந்திய மேலாண்மைக் கழகத்தின் (..எம்.) டாக்டர். .பி.ஜெ. அப்துல்கலாம் கொள்கை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பழங்குடியினர் குறித்த, “வெளிப்படும் வட-கிழக்கு இந்தியா: கைவினைப் பொருள்களில் திட்டமிட்ட மற்றும் வளர்ச்சிக்கான அவசியம்என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முன்டா இன்று (24.07.2020) தொடங்கி வைத்தார்.  

தொடக்க உரையாற்றிய திரு.அர்ஜுன் முன்டா, இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறை மிகவும் கலைநயம் மற்றும் புதுமைத் திறன் வாய்ந்தது என்றார்ஆனால், சந்தைப்படுத்துதல் மேலாண்மையில் உள்ள குறைபாடு காரணமாக, சர்வதேச சந்தையில் நமக்கு உரிய இடம் கிடைக்கவில்லைவடகிழக்கு மாநிலங்களில் விளையும் மூங்கில்களைப் பயன்படுத்தி தரமான ஊதுபத்திகள் தயாரிப்பதன் மூலம், இறக்குமதிச் சுமையை குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்பகவான் கணேசா-வின் (விநாயகரின்) பல்வேறு விதமான சிலைகள் இறக்குமதி செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதை விட மேலும் கலைநயமிக்க சிலைகளைத் தயாரிக்கும் திறன் நம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். நம்நாட்டிலிருந்து இரும்புத் தாது பெருமளவு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தரமான எஃகு இரும்பு நமக்கு கிடைக்காததால், மிகச்சிறிய வீட்டு உபயோகப் பொருளான நகம் வெட்டும் சாதனம் கூட நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும்தரமான இயற்கை வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் இயற்கைப் பொருள் மாநிலங்களாக எளிதில் மாற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  

நம் நாட்டிலுள்ள கைவினைஞர்களின் மனநிலையை மாற்றி, அவர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்திறன் மேம்பாடு தான் தற்போதைய தருணத்தில் மிகவும் அவசியம்முறையான செயல்திட்டம் இல்லாததால் தரமற்றப் பொருள்களை, அதிக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்நமது சந்தைத் தேவைகளை ஈடுகட்டுவதற்கான சரியான செயல்திட்டத்தை வகுப்பது அவசியம் என்றார்கைவினைக் கலைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதில் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும்நமது கைவினைக் கலைஞர்களின் உற்பத்திப் பொருள்களுக்ககான சர்வதேச சந்தை வாய்ப்புகளை நாம் ஆராயவேண்டும்நமது கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருள்கள், குறைந்த விலையில் மிகவும் தரமானவையாகவும்பார்ப்பதற்கு அழகாகவும், காண்போரை ஈர்க்கக் கூடியவையாகவும் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்நியப் பொருள்களை அதிகளவில் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதுடன்நமது கைவினைஞர்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய, இந்திய மேலாண்மைக் கழகம் (..எம்.) போன்ற நிறுவனங்கள் முக்கியமான பங்காற்ற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.   சாதாரண கைவினைஞர்களை, பெருந்தொழில் நிறுவனங்களோடு பிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.  

 

                                                                                      *****



(Release ID: 1640992) Visitor Counter : 140