அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர் உருவாக்கிய ஃபவிபிரவிரின் சிக்கனமான தொழில்நுட்பம் விரைவில் வெளியீடு

Posted On: 23 JUL 2020 8:13PM by PIB Chennai

ஜப்பான் பியூஜியில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தான ஃபவிபிரவிர், கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, குறைவான மற்றும் நடுத்தர தொற்று பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது.

உள்ளூரில் கிடைக்கும் வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி, சிஎஸ்ஐஆர்-ரசாயன தொழில்நுட்பத்திற்கான இந்திய நிறுவனம் சிக்கனமான தொழில்நுட்ப முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளது. சிப்லா நிறுவனம், இதன் உற்பத்தி வசதியை மேம்படுத்தி, இந்தியாவில் இதனை வெளியிட வேண்டும் என்பதற்காக இந்திய மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு தலைமை இயக்குனரகத்தின் அனுமதிக்காக அணுகியது. வரையறுக்கப்பட்ட அவசர பயன்பாட்டுக்காக ஃபவிபிரவிர் மருந்தை பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சிப்லா இந்த மருந்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

 

*****



(Release ID: 1640874) Visitor Counter : 116