குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊடகத் துறையில் கோவிட் தூண்டுதலால் எழுந்துள்ள நிதி நெருக்கடி குறித்து குடியரசுத் துணை தலைவர் கவலை தெரிவித்துள்ளார்

Posted On: 22 JUL 2020 7:36PM by PIB Chennai

ஊடகத்துறையில் கோவிட் தூண்டுதலால் எழுந்துள்ள  நிதி நெருக்கடி குறித்து இன்று தனது கவலையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, கடினமான தருணங்களில் தங்களது பணியாளர்களை ஊடகத்துறையில் உள்ள ஒவ்வொருவரும் பரிவுணர்வோடும், அக்கறையுடனும் நடத்துவதுடன், அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

 

மறைந்த திரு. எம்.பி வீரேந்திர குமாருக்கு, மரியாதை செலுத்தும் வகையில், இன்று நடைபெற்ற ஒரு மெய்நிகர் நினைவஞ்சலிக் கூட்டத்தில், மரியாதை செலுத்திய குடியரசுத் துணைத் தலைவர், மாத்ருபூமி அச்சிடுதல் மற்றும் வெளியீட்டு நிறுவனம், பலவிதமான இதழ்களை வெளியிடுவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் அதன் பணியாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து வந்ததற்காக அவரை வெகுவாகப் பாராட்டினார்

 

திரு.வீரேந்திர குமார் போன்றவர்களிடம் இருந்து உத்வேகம் பெறும் வகையில், சக குடிமக்கள் மீது மிகவும் பரிவுணர்வோடு நடந்து கொள்ளும் அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டுமென்று அனைவருக்கும் குடியரசுத் துணைத் தலைவர்  வேண்டுகோள் விடுத்தார்.

 

திரு.வீரேந்திர குமார், ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை கவனித்த திரு.நாயுடு, அவர் ஒரு மரியாதைக்குரிய அரசியல்வாதி, ஒரு சிறந்த எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஒரு திறமையான பத்திரிகையாளர் என்று புகழாரம் சூட்டினார்.

 

பல்வேறு பத்திரிகை அமைப்புகளின் உறுப்பினராக இருந்த திரு. வீரேந்திர குமார் மேற்கொண்ட பல முன் முயற்சிகள் மற்றும் பிரச்சாரங்களைப் பாராட்டிய குடியரசுத் துணை தலைவர், மக்களின் பெருன்பான்மை விருப்பங்களுக்காக பத்திரிக்கை சுதந்திரத்திற்காக ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார்.

 

"மாத்ரூபூமி அச்சிடுதல் மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி, பத்திரிக்கைத் துறைக்கு அவர் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார்" என்று திரு.நாயுடு மேலும் தெரிவித்தார்.

 

திரு. வீரேந்திர குமாரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தகவல்களை மக்களிடையே பரப்புவதன் மூலம், அவர்களை அதிகாரமயமாக்குதலாகும் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், வைரஸ் நோய் தொற்று பரவல் காலங்களில், சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

 

பணியில் ஆபத்துகள் இருந்த போதிலும், வைரஸ் தொற்று குறித்த தகவல்கள் மற்றும் தோற்றங்கள் வழியாக மக்களை அதிகரமயமாக்குதலுக்கு துணை நிற்கும் ஊடகங்களை அவர் பாராட்டினார். என்றாலும், கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த உறுதிசெய்யப்படாத மற்றும் ஆதாரமற்ற கூற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் ஊடகங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார்.

 

திரு.வீரேந்திர குமார் ஒரு முன்மாதிரியான சட்டமன்ற உறுப்பினர் என்று கூறிப்பிட்ட திரு. நாயுடு, அவரது நடத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் பின்பற்றுவதற்குத் தகுதியனாது என்றார்.

 

திரு. வீரேந்திர குமாரின் லட்சியங்கள் மற்றும் மாண்புகளில் அவரது உறுதிப்பாட்டை விளக்குவதற்கு, மரங்களை வெட்டுவதைத் தடை செய்வது குறித்த தனது முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, ​​திரு. வீரேந்திர குமார் கேரள அரசின் வனத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததன் உதாரணத்தை, குடியரசுத் துணை தலைவர் மேற்கோள் காட்டினார்.

 

*****


 



(Release ID: 1640643) Visitor Counter : 212