நிலக்கரி அமைச்சகம்
விருக்க்ஷாரோபன் இயக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
22 JUL 2020 4:47PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, புதுதில்லியில் நாளை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி முன்னிலையில் விருக்க்ஷாரோபன் இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தத் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர், ஆறு சுற்றுச்சூழல் பூங்காக்கள்/ சுற்றுலா இடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிலக்கரி/பழுப்பு நிலக்கரி உள்ள 10 மாநிலங்களைச் சேர்ந்த 38 மாவட்டங்களில் பரவியுள்ள 130–க்கும் மேற்பட்ட இடங்களில் காணொளிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி /பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் அமைந்துள்ள சுரங்கப்பகுதிகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் பொருத்தமான பகுதிகளில் பெருமளவுக்கு மரக்கன்றுகளை நடுவதற்கான விருக்க்ஷாரோபன் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரம் நடும் இயக்கத்தைப் பரப்பும் வகையில், அருகில் உள்ள பகுதிகளுக்கு மரக்கன்றுகளும், விதைகளும் விநியோகம் செய்யப்படும்.
சுற்றுச்சூழல் பூங்காக்கள்/ சுற்றுலா இடங்களில், பொழுதுபோக்கு, சாகசங்கள், நீர் விளையாட்டு, பறவைக் காட்சிகள் போன்றவை அமைக்கப்படும். அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இவை பொழுதுபோக்காக அமையும். மேலும், சுற்றுலா வட்டத்தை ஏற்படுத்தவும் வழி செய்யும். இந்த இடங்கள் மூலமாக, சுய ஆதாரங்கள் மூலம் வருவாய் ஈட்டவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஆதாரத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
.*****
(रिलीज़ आईडी: 1640559)
आगंतुक पटल : 224