ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உரங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு போதுமான அளவில் உள்ளது

Posted On: 22 JUL 2020 3:27PM by PIB Chennai

நாடெங்கிலும் உரங்கள் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் உள்ளது. 2019 – 2020-ல் யூரியா உற்பத்தி 244.55 எல்எம்டி அளவில் இருந்தது. இது 2018-19-ல் 240 எல்எம்டி மட்டுமே. யூரியா உற்பத்தியும், நுகர்வும் 336.97 எல்எம்டி-யை எட்டியுள்ளது. 2018-19-ல் இது 320.20 எல்எம்டி மட்டுமே.

கொவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்திலும், நாடெங்கிலும் உரங்களின் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் இருந்ததாக மத்திய உரங்கள் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். நடப்பாண்டிலும் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் உரங்கள் உற்பத்தி மொத்தம் 101.15 எல்எம்டி-யை அடைந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது 2.79 விழுக்காடு அதிகமாகும் என்றும் கூறினார். ஏப்ரல்-ஜூன் 2020 காலத்தில் யூரியா உற்பத்தி 60.38 எல்எம்டி-யை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.40 விழுக்காடு கூடுதலாகும்.

                                                   *******


(Release ID: 1640431) Visitor Counter : 232