அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆசிய யானைக்குட்டிகள் தும்பிக்கையைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வு

Posted On: 22 JUL 2020 12:40PM by PIB Chennai

ஆசிய யானைக்குட்டிகள் தும்பிக்கையைப் பயன்படுத்தும் முறைகளில் உள்ள தனித்தன்மை பற்றி ஜவஹர்லால் நேரு நவீன அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை அது வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரை, வளர்ச்சி உயிரியலுக்கான சர்வதேச பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நாகரஹோலில் உள்ள கபினி யானைத் திட்டம் மற்றும் பந்திப்பூர் தேசியப் பூங்காக்களில் உள்ள 30 யானைக் குட்டிகளை, 2015 முதல் 2017 வரை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு வலது கைப் பழக்கம் அல்லது இடது கைப் பழக்கம் இருப்பது போலவே ஆசிய யானைகளுக்கு, தும்பிக்கையைப் பயன்படுத்தும் விதத்திலும் தனித்தன்மை இருப்பது தெரிய வந்துள்ளது.

விரிவான தகவல்களுக்கு –

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1640359

                                 -------  



(Release ID: 1640407) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Manipuri