பாதுகாப்பு அமைச்சகம்

யுரேனின் கடற்படை நிலையமான கரஞ்சாவில் 2 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது.

प्रविष्टि तिथि: 21 JUL 2020 7:50PM by PIB Chennai

மேற்குக் கடற்படையின் தளபதி PVSM, AVSM, VSM, ADC கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் அஜித் குமார், 20 ஜூலை 2020 அன்று மேற்குக் கடற்படைக் கட்டளையின் முதல் இரண்டு மெகாவாட் திறன் சூரிய மின்நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த சூரிய ஆலை, கடற்படை நிலையம் கரஞ்சாவில் நிறுவப்பட்டுள்ளது, இது பிராந்தியத்தில் மிகப்பெரிய சூரிய ஆலைகளில் ஒன்றாகும். சூரிய ஆலை 100 சதவீதம்உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சோலார் பேனல்கள், கண்காணிப்பு அட்டவணைகள் மற்றும் இன்வெர்ட்டர்களைக் கொண்டுள்ளது. கணினிமயமாக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் கலை ஒற்றை அச்சு சூரியக் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆலைக் கட்டிடம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் சூரியசக்தியைப் பயன்படுத்துவதற்கும், கடற்படை நிலையத்தின் மின்சாரம் வழங்கல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலத்தைப் பயன்படுத்துவதற்கும் இந்தியக் கடற்படையின் குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

------


(रिलीज़ आईडी: 1640280) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Telugu