பாதுகாப்பு அமைச்சகம்
அந்தமான் நிக்கோபர் தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, கிழக்குக் கடற்படைக்கு வருகை தந்தார்.
Posted On:
21 JUL 2020 7:46PM by PIB Chennai
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, AVSM, VSM; அந்தமான், நிக்கோபார் தலைமைத் தளபதி (CINCAN) 20 ஜூலை 20 அன்று விசாகப்பட்டினத்திற்கு கிழக்குக் கடற்படையைப் பார்வையிட (ENC) மூன்று நாள் பயணமாக வந்தார். ஜெனரலுடன் அவருடைய மனைவியும், இராணுவ வீர்ர்களின் மனைவிகள் நலச் சங்கத்தின் (DWWA) தலைவர் திருமதி அர்ச்சனா பாண்டேவும் உடன் இருந்தார்.
லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, துணை அட்மிரல் அதுல் குமார் ஜெயின், PVSM, AVSM VSM; கொடி அதிகாரியுடன் 22 ஜூலை 2020 அன்று தலைமை கிழக்குக் கடற்படையின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். பின்னர், கிழக்குக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையின் பொறுப்புகள் குறித்தும் பிற செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கிழக்குக் கடற்படை (ENC) மற்றும் அந்தமான், நிக்கோபார் கடற்படை ஆகியவை ஒருவருக்கொருவர் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
****
(Release ID: 1640279)
Visitor Counter : 205