பாதுகாப்பு அமைச்சகம்
வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யஸோ நாயக் தொடங்கி வைத்தார்
Posted On:
15 JUL 2020 8:25PM by PIB Chennai
'இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் 'தற்சார்புள்ள இந்தியா' இயக்கங்களை மேம்படுத்த இந்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ், இந்தியப் பாதுகாப்பு மற்றும் வான்வெளித் தொழில்கள், மாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளதாக மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யஸோ நாயக் கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த 5-வது மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். இந்த மாநாட்டின் மையக் கருத்து 'தற்சார்புள்ள இந்தியா இயக்கத்துடன் இணைந்து இந்தியாவுக்கு அதிகாரமளித்தல்' என்பதாகும்.
பாதுகாப்பு உற்பத்திக் கொள்கை இலக்கான 26 பில்லியன் டாலரை 2025 ஆம் ஆண்டுக்குள் அடையவும், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் நாட்டை தற்சார்புள்ளதாக மாற்றும் வகையிலும், மேலும் அதிகப் பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என அவர் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையினரைக் கேட்டுக்கொண்டார். சமீப ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை விரிவாக வளர்ச்சி அடைந்துள்ளது.
2008 முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலத்தில் அது 9.7 சதவீதம் என்ற கூட்டு ஆண்டு வளர்ச்சி விகித அளவில் உயர்ந்து, தற்போது 2017-18 ம் ஆண்டில் 42.83 பில்லியன் டாலர் என்ற அளவினை அடைந்துள்ளது. 2030ம் ஆண்டு வாக்கில் இந்திய வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் 70 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. " இந்திய வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பிரமாதமாக வளரும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் போட்டியிடும் வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளது. முன்னணி மையமாக வளர்ச்சி அடையும் சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது. வடிவமைப்பு, உற்பத்தி, பொறியியல், தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் சேவைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியாளராக மாறும் திறன் கொண்டுள்ளது" என்று திரு ஸ்ரீபாத் யஸோ நாயக் கூறினார்.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று, இதன் சுற்றுலா பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது, 2026 வாக்கில் விமான நிலைய கட்டுமான வசதிகளில் 1.83 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுத் திட்டத்துடன் அது மேலும் வளர்ச்சி அடைய உள்ளது.
*****
(Release ID: 1639041)
Visitor Counter : 199