புவி அறிவியல் அமைச்சகம்

ஐதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் தூய்மை வாரம்

Posted On: 15 JUL 2020 6:03PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் அமைச்கத்தின் கீழ் ஐதராபாத்தில் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் தூய்மை வாரம் ஜூலை 15 வரை கடைபிடிக்கப்பட்டது. திறந்தவெளி கழிப்பறை முறையை அகற்றுதல், திட மற்றும் திரவக் கழிவுகளை திறம்பட நிர்வகித்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாப்பான மற்றும் நிலைத்த சுகாதார முறைகளைக் கடைபிடித்தல், ஒட்டுமொத்த தூய்மை ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவன வளாகத்தில் மரம் நடுதல் மற்றும் தனிநபர் சுகாதாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

*****


(Release ID: 1639010) Visitor Counter : 287