அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தொழிற்சாலைக் கழிவுப் பருத்தியும், இயற்கைக் கடல்நீர் மின்பகுபொருளும் மின்சார சேமிப்புக்கு உதவும்.

Posted On: 14 JUL 2020 7:01PM by PIB Chennai

மின்சார அறுவடை மற்றும் சேமிப்பு இயந்திரமாகப் பயன்படுத்தக் கூடிய எளிய, குறைந்த விலையுள்ள, சுற்றுச்சூழலுக்கு நட்பான மற்றும் நிலையான சிறப்பு மின்தேக்கி மின்முனையை, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பான தூள் உலோகவியல் மற்றும் புதியப் பொருள்களுக்கான சர்வதேச முன்னேறிய ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் தொழிற்சாலைக் கழிவுப் பருத்தியில் இருந்து உருவாக்கியுள்ளனர். சிறப்பு மின்தேக்கியின் பொருளாதார கட்டுருவாக்கத்துக்காக தற்போது இருக்கும் நீர் கலந்த மின்பகுபொருளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு நட்பான, விலை குறைந்த, அளவிடக்கூடிய மற்றும் மாற்று நீர் கலந்த மின்பகுபொருளாக இயற்கைக் கடல் நீரை முதல் முறையாக பயன்படுத்தியுள்ளனர்.

 

உயர் மின் அடர்த்தி, நீடித்த ஆயுள் மற்றும் வழக்கமான மின்தேக்கிகள் மற்றும் லித்தியம் அயன் மின்கலங்களோடு ஒப்பிடும் போது அதிவேக மின்னேற்றம் ஆகிய பலன்களுக்காக அடுத்த தலைமுறை மின்சார சேமிப்புக் கருவியான சிறப்பு மின்தேக்கி பெரிதான ஆராய்ச்சி கவனத்தை பெற்றுள்ளது.

 

1ஏஜி-1 மின்சார அடர்த்தியுடன் அதிகபட்சக் கொள்ளளவை இயற்கை கடல் நீர் சார்ந்த சிறப்பு மின்தேக்கி வெளிப்படுத்தியதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக, 99 சதவீத கொள்ளளவு தக்கவைத்தலுடனும், 99 சதவீத கூலோம்பிக் திறனுடனும் (மின்வேதியியல் எதிர்வினையை உருவாக்கி ஒரு அமைப்புக்குள் மின்சாரத்தை செலுத்தும் திறன்) 10,000 மின்னேற்றம்-இறக்க சுழற்சிகளுடன் மிக சிறந்த நீடித்து உழைக்கும் தன்மையை கடல் நீர் சார்ந்த சிறப்பு மின்தேக்கி வெளிப்படுத்தியுள்ளது.

 

ஆராய்ச்சிக் குழுவின் புதிய, நிலையான மற்றும் பசுமை சிறப்பு மின்தேக்கி நடைமுறை பயன்பாட்டுக்கான உயர் சாத்தியத்தைக் காட்டியதோடு, மிக முக்கியமாக, விலை குறைந்த, சுற்றுச்சூழலுக்கு நட்பான, திறமையான, சுய-சக்தி கருவியை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

"புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அதிக அளவிலான பயன்பாட்டுக்கு அதற்கு இணையான திறன் கொண்ட விலை குறைவான மின் சக்தி சேமிப்பு தேவைப்படுகிறது. அதிக அளவில் கிடைக்கக்கூடிய பொருள்களான கழிவுப் பருத்தி மற்றும் கடல் நீரைக் கொண்டு உருவாக்கப்படும் சிறப்பு மின்தேக்கிகளின் கட்டுருவாக்கத்துக்கு இந்த ஆய்வு ஒரு தீர்வை அளிக்கிறது!நிலையான, பசுமைச் செயல்பாடுகளையுடைய, கழிவிலிருந்து செல்வத்தை உருவாக்குவதற்கான உட்பொதிந்தக் கொள்கைகளுக்கான ஆக்கப்பூர்வ அறிவியலுக்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்," என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், பேராசிரியர். அசுதோஷ் ஷர்மா கூறினார்.

 

மேலும் தகவல்களுக்கு, டாக்டர். மணி கார்த்திக்கை அணுகவும்

 

(mkarthik@project.arci.res.in)

 

***
 


(Release ID: 1638644) Visitor Counter : 268