ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள், உர அலகுகளின் திறனை மேம்படுத்துவதற்கும், சமச்சீரான உரப் பயன்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அவசியம் என திரு.கவுடா வலியுறுத்தல்.

Posted On: 13 JUL 2020 7:39PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. சதானந்த கவுடா இன்று காணொளிக் காட்சி மூலம் உரத்துறை சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் உர அலகுகளின் திறனை மேம்படுத்துவதற்கும், சமச்சீரற்ற உரப் பயன்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும்  அவசியம் என வலியுறுத்தினார். இது சிந்தனை முகாமின்  துணைக் குழுவின் இரண்டாவது கூட்டம் . இந்தக் குழுக் கூட்டத்தின் நோக்கம் , உரத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகும்.

இந்தக்கூட்டத்தில், உரத்துறை , விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக செயலர்கள், கூடுதல் செயலர் ( உரம்), நிதிஆயோக் மூத்த அதிகாரி, ஒடிசா, கேரளா மாநில அரசு அதிகாரிகள், இந்திய உரச்சங்கம்இப்கோ, கிரிப்கோ, என்எப்எல், ஆர்சிஎப், ஜிஎன்எப்சி  போன்ற உரத் தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள், சில முன்னேற்ற விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தத் துறை சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பெறப்பட்ட இந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் , பிரதமர் திரு. நரேந்திர மோடியின் , விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் தொலைநோக்கை எட்டுவதை நோக்கிய மேலதிக சீர்திருத்தங்களை உரத்துறையில் கொண்டு வர உதவும்.

 ----------------------------------------------------------------------------------------------

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/IMG-20200713-WA0080JZPH.jpg

*****


(Release ID: 1638407) Visitor Counter : 198