புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2020 ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் கிராமப்புறம், நகர்ப்புறத்தில் ஒருங்கிணைந்த அடிப்படை 2012 = 100 ஆகும்

Posted On: 13 JUL 2020 5:30PM by PIB Chennai

தேசிய புள்ளிவிவர அலுவலகமும் (NSO), புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும், வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2020 ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் கிராமப்புற, நகர்ப்புறத்தில் ஒருங்கிணைந்து அடிப்படை 2012 = 100 என வெளியிட்டது. அகில இந்திய கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீடும் (CFPI) வெளியிடப்படுகிறது.

 

2. விலைத் தரவு வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, 1181 கிராமங்களுக்கு தேசிய புள்ளி விவர அலுவலகம்( NSO) மற்றும்  புள்ளி விவரங்கள், திட்ட அமலாக்கத் துறையின் (MoSPI) கள செயல்பாட்டு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டு வாராந்திரப் பட்டியலைச் சேகரிக்கின்றனர். கோவிட் - 19 தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, விலை தொடர்பான கள செயல்பாட்டு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) விலைகளைச் சேகரிக்க செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு காலகட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளின் நியமிக்கப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் விலைகள் சேகரிக்கப்பட்டன, இது பயண ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அண்டை விற்பனை நிலையங்களிலிருந்து பரிவர்த்தனை செய்யப்படும் பொருள்களுக்கு கள ஊழியர்களை தனிப்பட்ட முறையில் வாங்கும் போது சேகரிக்கப்பட்ட தகவல்களால் கூடுதலாக வழங்கப்பட்டது. தொற்று நோய் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அத்தியாவசியமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக 2020 ஜூன் மாதத்தில் கிடைத்த மற்றும் பரிவர்த்தனை செய்யப்பட்ட பொருள்களுக்கு NSO, 1030 நகர்ப்புறச் சந்தைகள் மற்றும் 998 கிராமங்களிலிருந்து விலைகளை சேகரித்தது. இருப்பினும், சேகரிக்கப்பட்ட தகவல்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் (CPI) வலுவான மதிப்பீடுகளை மாநில அளவில் உருவாக்குவதற்கான போதுமான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை.

 

3. மேற்கண்ட கூற்றின் அடிப்படையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் துறைகளில் தேசிய அளவில் ஒரு பொதுவான சந்தையை தனித்தனியாகக் கருத்தில் கொண்டு அகில இந்திய குறியீடுகள் தொகுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய பொதுக் (அனைத்து குழுக்கள்), குழு மற்றும் துணைக் குழு நிலை (CPI) & (CFPI) கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த ஜூன் 2020 (தற்காலிக (P) ) க்கான பணவீக்கம் தொகுக்கப்பட்டு இணைப்பு -1 இல் வழங்கப்பட்டுள்ளன. மே 2020க்கான CFPI குறியீடுகளும் கூடுதலாக அறிவிக்கப்பட்ட விலை தரவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளன.

 

மேலதிக விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1638314

 

*********


(Release ID: 1638359)