இந்திய போட்டிகள் ஆணையம்

(i) குபோட்டா கார்ப்பொரேஷனால் (குபோட்டா) எஸ்கார்ட்ஸ் லிமிடெட்டில் (எஸ்கார்ட்ஸ்) செய்யப்பட்ட கையகப்படுத்தலுக்கும், (ii) எஸ்கார்ட்ஸால் குபோட்டா அக்ரிகல்ச்சுரல் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் (KAI) செய்யப்பட்ட கையகப்படுத்தலுக்கும் இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதலளித்தது

Posted On: 10 JUL 2020 7:25PM by PIB Chennai

(i) குபோட்டா கார்ப்பொரேஷனால் (குபோட்டா) எஸ்கார்ட்ஸ் லிமிடெட்டில் (எஸ்கார்ட்ஸ்) செய்யப்பட்ட கையகப்படுத்தலுக்கும், (ii) எஸ்கார்ட்ஸால் குபோட்டா அக்ரிகல்ச்சுரல் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் (KAI) செய்யப்பட்ட கையகப்படுத்தலுக்கும் போட்டிச் சட்டம், 2002-இன் 31 (1)-இன் பிரிவின் கீழ் இந்தியத் வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதலளித்தது.

 

முன்மொழியப்பட்ட இணைப்பு என்பது எஸ்கார்ட்ஸின் மொத்தமாக வெளியிடப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மற்றும் பணம் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் குபோட்டாவால் கையகப்படுத்தப்பட்ட 9.09 சதவீதம் ஆகும்மூலதனக் குறைப்பு செயல்முறை எஸ்கார்ட்ஸால் நிறைவு செய்யப்பட்டவுடன், மொத்தமாக வெளியிடப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மற்றும் பணம் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் இது 10 சதவீதமாக இருக்கும். மேலும், KAI-இன் 40 சதவீதப் பங்குகளை எஸ்கார்ட்ஸ் கையகப்படுத்தும். இதன் படி, KAI-இல் குபோட்டாவும், எஸ்கார்ட்ஸும் 60-40 சதவீதப் பங்குகளை முறையே வைத்திருக்கும்.

 

குபோட்டா என்பது ஜப்பானின் சட்டங்களின் படி நிறுவப்பட்ட நிறுவனமாகும். விரிவான வேளாண் பொருள் தயாரிப்பாளரான குபோட்டா, டிராக்டர்கள், ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் மற்றும் நாற்று நடும் இயந்திரங்கள் போன்ற பல்வேறு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. பொறியியல், கொள்முதல், கட்டுமானம் முதல் பராமரிப்பு வரை, தண்ணீரின் பாதுகாப்புக்குப் பங்களித்தல் போன்றவற்றையும் குபோட்டா வழங்குகிறது.

 

எஸ்கார்ட்ஸ் இந்தியாவில பதிவு செய்யப்பட்ட ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். பம்பாய் மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் எஸ்கார்ட்ஸின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வேளாண்-இயந்திரங்கள், கட்டுமானக் கருவிகள் மற்றும் ரயில்வே கருவிகள் ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையின் எஸ்கார்ட்ஸ் ஈடுபட்டுள்ளது.

 

இந்தியப் பங்கு ஆணையத்தின் விரிவான உத்தரவு இதைத் தொடர்ந்து வெளியிடப்படும்.

 

****
 



(Release ID: 1637871) Visitor Counter : 157