கலாசாரத்துறை அமைச்சகம்
மங்கோலிய கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகளின் மறு அச்சிடப்பட்ட தொகுதிகளில் முதல் ஐந்து தொகுதிகள் வெளியிடப்பட்டன
Posted On:
09 JUL 2020 4:16PM by PIB Chennai
கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தின் (National Mission for Manuscripts - NMM) கீழ் மங்கோலிய கஞ்சூரின் 108 தொகுதிகளை மறுபதிப்பு செய்யும் திட்டத்தை கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. NMM இயக்கத்தின் கீழ் வெளியிடப்பட்ட மங்கோலிய கஞ்சூரின் ஐந்து தொகுதிகளின் முதல் தொகுப்பு இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்திற்கு, தர்ம சக்ரா தினம் என்றும் அழைக்கப்படும் குரு பூர்ணிமா தினத்தன்று 2020, ஜூலை 4ஆம் தேதி வழங்கப்பட்டது. பின்னர் ஒரு தொகுப்பு இந்தியாவின் மங்கோலியாவின் தூதர் திரு. கோன்ச்சிங் கான்போல்ட் அவர்களிடம், கலாச்சார அமைச்சகத்தின் மாநில அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) மற்றும் சுற்றுலா அமைச்கத்தின் மாநில அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) ஆகியோரால். சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் திரு கிரேன் ரிஜிஜு முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மங்கோலிய கஞ்சூரின் மொத்த 108 தொகுதிகளும் மார்ச், 2022க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்று வெளியிடப்படாத, அரிதான கையெழுத்துப்பிரதிகளை வெளியிடுவதேயாகும், இதனால் அவற்றில் பொதிந்துள்ள ஆழ்ந்த அறிவு ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், பொதுமக்களுக்குப் பரவலாகப் பரவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மங்கோலிய கஞ்சூரின் 108 தொகுதிகளின் மறுபதிப்பு இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அனைத்து தொகுதிகளும் மார்ச், 2022க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல அறிஞர் பேராசிரியர் லோகேஷ் சந்திராவின் மேற்பார்வையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
*********
(Release ID: 1637681)
Visitor Counter : 291