உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, மத்திய அமைச்சரவை இன்று எடுத்த முக்கிய முடிவுகளைப் பாராட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்

Posted On: 08 JUL 2020 8:09PM by PIB Chennai

கொரோனா பேரழிவின்போது எவரும் பசியுடன் இருக்ககூடாது என்பதை உறுதி செய்யும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் நிலைப்பாடு போற்றுதலுக்கு உரியதாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா தெரவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள திரு.அமித் ஷா, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை வழங்க வகை செய்யும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை (பி.எம்.ஜி.கே.ஏ) நவம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதை பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார்.

 

திரு.அமித் ஷா கூறுகையில், “கொரோனா நெருக்கடியின் ஆரம்ப நாட்களில், உஜ்வலா திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலின்டர்களை மூன்று மாதங்களுக்கு வழங்க பிரதமர் முடிவு எடுத்திருந்தார். பல குடும்பங்கள் மூன்று சிலின்டர்களை முழுமையாகப் பெற முடியவில்லை. இதன் விளைவாக, இந்த திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” “இதன் மூலம் ஏழு கோடியே நாற்பது லட்சம் பெண்கள் பயனடைவார்கள்”, என்று திரு.அமித் ஷா தெரிவித்தார்.

 

"இன்று, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில்  குடியேறும் புலம் பெயர்ந்தவர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வாடகையில் வீட்டுவசதி வளாகத்திற்கு மத்திய அமைச்சரவை மேலும் ஒப்புதல் அளித்துள்ளது. மோடி அரசின் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவின் மூலம், நகரங்களில் கட்டப்படும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா அடுக்கு மாடி குடியிருப்புகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்களுக்கு மலிவான வாடகைக்கு கிடைக்கும்.” என்றார். “அனைவருக்கும் வீட்டு வசதி” என்ற இலக்கை மேலும் வலுப்படுத்தும் இந்த முடிவை வரவேற்றுள்ள திரு.அமித் ஷா, திரு. மோடிக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறுகையில்,அனைவரும் ஒன்றிணைவோம் அனைவரும் உயர்வோம்என்ற மந்திரத்திற்கான தது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி இருப்பதன் மூலம், சிறு வணிகர்களுக்கு  பயனளிக்கும் வகையில் மற்றொரு முக்கியமான திட்டத்தை” பிரதமர் விரிவுபடுத்தி இருப்பதாகக் குறிபிட்டார். “இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த முடிவால், சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 72 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் திரு.அமித் ஷா குறிப்பிட்டார்.

 

*********



(Release ID: 1637532) Visitor Counter : 172