கலாசாரத்துறை அமைச்சகம்

“சங்கல்பர்வா”-வை முன்னிட்டு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் மரக்கன்றுகளை நட்டார்

Posted On: 07 JUL 2020 10:22PM by PIB Chennai

    மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.பிரகலாத் சிங் பட்டேல், “சங்கல்பர்வா”-வை முன்னிட்டு, தில்லியில் உள்ள கிலா ரை பிதோரா மற்றும் தேசிய ஆவணக் காப்பக வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டார். கிலா ரை பிதோராவிற்கு அமைச்சர் சென்ற போது, அங்கு நடைபெற்று வரும் நினைவுச் சின்னங்களை புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். தேசிய ஆவணக் காப்பகத்தில் கைப்பிரதிகளை மீட்டெடுக்கும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

   பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை அடுத்து, மத்திய கலாச்சார அமைச்சகம் 2020 ஜூன் 28-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவன வளாகங்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வான “சங்கல்பர்வா“-வைக் கொண்டாடி வருகிறது. பிரதமரால் அடையாளம் காணப்பட்ட, நமது நாட்டின் மூலிகை பாரம்பரியத்தைக் குறிக்கும் 5 விதமான மரங்களின் கன்றுகளை நடுமாறு மத்திய கலாச்சார அமைச்சகம் பரிந்துரைத்திருப்பதாக திரு.பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

*****


 


(Release ID: 1637162) Visitor Counter : 178


Read this release in: English , Urdu , Hindi , Manipuri