விவசாயத்துறை அமைச்சகம்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கார், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் 11 ஏப்ரல் முதல் 6 ஜூலை, 2020 வரை 2.75 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Posted On: 07 JUL 2020 7:32PM by PIB Chennai

11 ஏப்ரல் முதல் 6 ஜூலை, 2020 வரைராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 1,43,422 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் வெட்டுக்கிளி வட்ட அலுவலர்களால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கார், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் 6 ஜூலை, 2020 வரை 1,32,465  லட்சம் ஹெக்டேர் நிலங்களில் மாநில அரசுகளால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

 

6-7 ஜூலை, 2020-இன் இடைப்பட்ட இரவில், ராஜஸ்தானில் உள்ள பார்மர், பிக்கெனர், ஜோத்பூர், நாகவுர், ஆஜ்மீர், சிகார் மற்றும் ஜெய்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 22 இடங்கள், உத்திரப்பிரதேசத்தின் ஜான்சி மாவட்டம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் டிக்கம்கர் மாவட்டத்தில் தலா ஒரு இடம் என வெட்டுக்கிளி வட்ட அலுவலர்களால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தவிர, வெட்டுக்கிளிகளின் சிறிய மற்றும் சிதறியக் குழுக்களுக்கு எதிராக, 6-7 ஜூலை, 2020-இன் இடைப்பட்ட இரவில், ஜான்சி மாவட்டத்தின் மூன்று இடங்களில் உத்திரப்பிரதேச மாநில வேளாண் துறையாலும்டிக்கம்கர் மாவட்டத்தின் ஒரு இடத்தில் மத்தியப்பிரதேச மாநில வேளாண் துறையாலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.   

 

மேலும், பூச்சிக்கொல்லியைத் தெளிப்பதன் மூலம் உயரமான மரங்களிலும், அணுகமுடியாத இடங்களிலும் இருக்கும் வெட்டுக்கிளிகளின் சிறப்பான கட்டுப்படுத்துதலுக்காக ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சால்மர், பிக்கனெர், நாகவுர் மற்றும் பலோடி ஆகிய இடங்களில் 15 ஆளில்லாத விமானங்களுடன் 5 நிறுவனங்கள் அனுப்பப்பட்டன. வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் முதல் நாடு இந்தியா ஆகும்.

 

ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரேதசம் ஆகிய மாநிலங்களுக்கு மருந்து தெளிக்கும் வாகனங்களுடன் 60 கட்டுப்பாட்டுக் குழுக்கள் தற்சமயம் அனுப்பப்பட்டு, 200-க்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக, 20 மருந்து தெளிக்கும் உபகரணங்கள் இன்று இந்தியாவை வந்தடைந்தன.

 

குஜராத், உத்திரப்பிரேதசம், மத்தியப்பிரதேசம், மாகாராஷ்டிரா, சத்திஸ்கார், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. எனினும், ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சில சிறிய அளவிலான பயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று (07.07.2020), ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், பிக்கெனர், ஜோத்பூர், நாகவுர், ஆஜ்மீர், சிகார் மற்றும் ஜெய்பூர் மாவட்டங்களிலும், உத்திரப்பிரேதசத்தின் ஜான்சி மாவட்டத்திலும், மற்றும் மத்தியப்பிரதேசத்தின் டிக்கம்கர் மாவட்டத்திலும் முதிர்ச்சியற்ற இளஞ்சிவப்பு வெட்டுக்கிளிகளும் மற்றும் வளர்ந்த மஞ்சள் வெட்டுக்கிளிகளும் திரளாகக் காணப்பட்டன.

***



(Release ID: 1637084) Visitor Counter : 166