அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆன்டிவைரல் மற்றும் ஓம்புயிரி-இயக்க சிகிச்சைகளின் சேர்க்கைகளைப் பயன்படுத்தி கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற சி.எஸ்.ஐ.ஆர், லக்சாய் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.

Posted On: 07 JUL 2020 6:31PM by PIB Chennai

ஹைதராபாதின் லக்சாய் லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR), நான்கு கை சீரற்ற கட்டுப்பாட்டு மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள ஒழுங்குமுறை ஒப்புதல் கோரியுள்ளது. நோயின் பரவல் மற்றும் நோயியலை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்யும் ஆன்டிவைரல்கள் (வைரஸ்-நுழைவு மற்றும் பிரதித் தடுப்பான்கள்) மற்றும் ஓம்புயிரி-இயக் சிகிச்சைகள் (Host-Directed Therapies) ஆகியவற்றை பகுத்தறிவுடன் இணைத்து மறுபயன்பாடு செய்வதும், மூன்று சேர்க்கை மருந்துகளின் (Favipiravir+Colchicine, Umifenovir+Colchicine and Nafamostat+5-ALA) பாதுகாப்பு மற்றும் செயல்திறனைத் தீர்மானிப்பதும் மற்றும் கோவிட் -19 நோயாளிகளுக்குக் கட்டுப்பாட்டுகளுடன் கூடிய தரமான பாதுகாப்பை வழங்குவதும் ஆய்வின் முக்கிய வடிவமைப்புக் கொள்கையாகும். மெடந்தா மெடிசிட்டியுடன் கூட்டாக மேற்கொள்ளப்படவுள்ள MUCOVIN என்ற மருத்துவ பரிசோதனையில், மொத்தம் 300 நோயாளிகளில் 75 நோயாளிகள் கொண்ட நான்கு வெவ்வேறு குழுக்களில் 17 முதல் 21 நாட்கள் வரை பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.

சி.எஸ்.ஐ.ஆரின் பொது இயக்குநர் டாக்டர். சேகர் சி. மண்டே, கோவிட்-19 சிகிச்சைக்காக ஒருங்கிணைந்த யுக்தியான ஆண்டி வைரல்கள் மற்றும் ஒம்புயிரி இயக்க சிகிச்சையுடன் மறுபயன்பாட்டு மருந்துகளுடன் அளிக்கப்படும் இந்த தனித்துவமான சிகிச்சை, கோவிட்-19 சிகிச்சைக்கான சிகிச்சை முறைகளை அதிகரிக்கவும், நோயாளிகளை விரைவாக மீட்கவும் உதவுகிறது. இந்த முக்கியமான மருத்துவப் பரிசோதனையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி மற்றும் ஜம்மு, சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஒருங்கிணைந்த மருத்துவம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

லக்சாய் லைஃப் சயின்சஸ் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ராம் எஸ். உபாதயாயா, “இந்த ஆய்வு அதன் பிரதிக்கு அவசியமான வைரஸ் புரதங்களையும், வைரஸ் வாழ்க்கைச் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சைட்டோகைன் அதிவேகப் பரவலுக்கு பங்களிக்கும் ஓம்புயிரியின் காரணிகளையும் குறி வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார். லட்சாய் லைஃப் சயின்ஸின் இயக்குநர்,. திரு. வம்சி மடிபட்லா மேலும் கூறுகையில், “லக்சாய் லைஃப் சயின்ஸின் இந்த ஆய்வின் இணை அனுசரணை மனிதகுல சேவையில் உயிர் காக்கும் சிகிச்சைகளை கொண்டு வருவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.

இந்த மருத்துவப் பரிசோதனைகள், தொற்று நோயின் போது சி.எஸ்.ஐ.ஆர் செய்த பல பங்களிப்புகளுடன் சேர்கின்றது. இந்த மருத்துவ சோதனை வெற்றிகரமாக இருந்தால், இது கோவிட்-19 சிகிச்சைக்கான கூடுதல் வழிகளை வழங்கும்.

*****


(Release ID: 1637080) Visitor Counter : 222