பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமியில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கான வகுப்புகள் இரண்டாம் கட்டம் - 2018 பிரிவு - காணொளி மாநாடு மூலம் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்.
Posted On:
06 JUL 2020 5:07PM by PIB Chennai
2020ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் அனைத்திந்திய தன்மையை பெற்றுள்ளன; கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் அதிகாரிகள் இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம் இணையமைச்சர், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுமின்சக்தி, விண்வெளித்துறை ஆகியவற்றுக்கான மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகள் மிகப்பெரிய சொத்துக்கள் ஆவர். அவர்கள் இந்திய சிவில் சர்வீஸ் அமைப்புகளின் தந்தையாகக் கருதப்படும் சர்தார் பட்டேல் அவர்களின் கனவை நனவாக்கும் வகையிலான சொத்துக்கள் இவர்கள் என்று அமைச்சர் கூறினார்.லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமி, (Lal Bahadur Shastri National Academy of Administration - LBSNAA) முசோரியில்நடைபெறும் 2018 பிரிவுக்கான இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சியைக் காணொளி மூலமாக துவக்கி வைத்துப் பேசினார்.
புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் சிற்பிகளாக இந்த அதிகாரிகள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது என்று அமைச்சர் கூறினார். இதற்கான அடித்தளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்கனவே அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். விடுதலை பெற்று 73 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தியா மிக வலுவான நிலையில் உயரிய நிலையில், மிகுந்த நம்பிக்கையுடனும் பெருமளவு திறன்களுடனும் எதிர்காலத்தைப் பார்க்கிறது. நம்முடைய நாட்டைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், குடிமக்களைப் புரிந்துகொண்டு, வளர்ச்சி என்ற ஒரே பொதுவான நோக்கத்தைக் கருத்தில் கொண்டு மக்களை அவரவர் துறையில் ஊக்கப்படுத்துகின்ற அரசின் தொடர் முயற்சிகளே வளர்ச்சிக்குக் காரணம் என்று அவர் கூறினார். கடந்த பத்து வார காலமாக கோவிட் காரணமாக கடுமையான நெருக்கடி நிலவுகின்ற காலத்திலும் கோவிட்டுக்கு முந்தைய காலங்களைப் போலவே செயல்பாடுகள் சுமூகமாக நடக்கமுடியும் என்பதை உலகுக்கு இந்தியா எடுத்துக் காண்பித்துள்ளது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் இணைய வழியாகத் துவக்கி வைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், 185 பேரில் 125 பேர் பொறியியல் மற்றும் இதர தொழில்சார்படிப்புகள் படித்தவர்கள் என்றும், தற்போது இந்தியாவை எதிர்நோக்கியுள்ள நவீன காலத்தின் மேம்பாட்டுக்கான சவால்களை எதிர் கொள்வதற்கு இது நீண்ட காலம் பயனுள்ளதாக அமையும் என்றும் கூறினார்.
இந்த ஆண்டு இரண்டாம் கட்டத்தில் பயிற்சிபெறும் 185 அதிகாரிகள் மூன்று பிரிவினர்
- 2018ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப்பணிப் பிரிவைச்சேர்ந்த 179 அதிகாரிகள்
- 2017ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிப் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் (சென்ற ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்கள்)
- ராயல் பூட்டான் சிவில் சர்வீஸ் பணிகளைச் சேர்ந்த 3 அதிகாரிகள்
(Release ID: 1636857)
Visitor Counter : 240