அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

காந்த நானோ பார்ட்டிகிள் மூலமான புற்றுநோய் சிகிச்சையின் திறனை கலோரிகள் இல்லாத இயற்கை இனிப்பு அதிகரிக்கிறது.

Posted On: 04 JUL 2020 3:01PM by PIB Chennai

தேன்  எர்பா (honey yerba) இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஸ்டீவியோசைட் எஸ் டி இ என்பது கலோரி இல்லாத இயற்கையான இனிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மேலும் பல நல்ல பலன்களை நமக்கு அளிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில் தேன் எர்பா (‘Stevia rebaudianaBertoni’) இலைகளில் காணப்படும் இயற்கையான செடி அடிப்படையிலான கிளைகோசைட் ஆன ஸ்டீவியோசைட் நானோ பொருள்கள் மீது பூசப்பட்டால் எம் எச் சி டி Magnetic hyperthermia-mediated cancer therapy எனப்படும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையின் திறனை அதிகரிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

 

ஹைபர் தெர்மா எனப்படும் மிகை வெப்பநிலை பற்றிய சர்வதேச இதழில் ரூபி குப்தா தீபிகா ஷர்மா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது க்ளையோமா C6 புற்றுநோய் அணுக்கள் க்ளையல் glial புற்றுநோய் தீவிரமாகப் பரவுவதற்கான மிகப் பொதுவான அணுக்கள் ஆகும். இந்த அணுக்களில் உள்ள நானோ மேக்னடிக் அப்டேக் நானோ பார்ட்டிகள் மீது ஸ்டீவியோசைட் பூச்சு மூலமாக அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அது தக்க வைத்துக் கொள்ளப்படும் நேரத்தையும் அதிகரிக்கிறது. ஆய்வுக்கூடங்களில் தொகுக்கப்படும் நானோ தொகுப்புகளுக்கான பயோ சர்ஃபெக்டண்ட் மிகச் சிறந்த முறையில் இது செயல்படும் வகையில் இந்த ஸ்டீவியோசைடின் கட்டமைப்பை ஆய்வாளர்கள் மாற்றி அமைத்துள்ளனர். ஜர்னல் ஆஃப் ஏஜிஎஸ் ஃபார்மசுடிகல்ஸ் என்ற இதழுக்கு இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது

ஸ்டீவியோசைட் பூசப்பட்ட மீநுண் துகள்களால் அணுக்களில் 72 மணி நேரம் வரை மிக உயர்ந்த அணு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும், என்றும் இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. நானோ காந்தங்கள், போதுமான கால அளவிற்கு குறைந்தபட்சம் 72 மணி நேரம் வரை அணுக்களில் நீடிக்கும் திறன் கொண்டவை என்றும் ஆய்வு கூறுகிறது. இந்த காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான இதர சிகிச்சை உத்திகளை மேற்கொள்ளலாம். இதனால் மீநுண் பொருள்களை மீண்டும் செலுத்த வேண்டியதன் அவசியத்தைத் தவிர்க்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு, தீபிகா ஷர்மா (deepika@inst.ac.in) மின்ன்ஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் (deepika@inst.ac.in)

 

*****


(Release ID: 1636445) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Manipuri