அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியர்களில் டைப் -1 நீரிழிவு நோயைக் கண்டறிய மரபியல் உதவக்கூடும்: ஆய்வு வெளியீடு

Posted On: 04 JUL 2020 2:58PM by PIB Chennai

புனேவின் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (KEM) ஆராய்ச்சியாளர்கள்; அறிவியல் மற்றும் ஹைதராபாத்தின் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) - செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (CCMB), மற்றும் இங்கிலாந்தில் உள்ள எக்ஸிடெர் பல்கலைக்கழகம் இந்தியர்களில் டைப் -1 நீரிழிவு நோயைக் கண்டறிய மரபணுவில் ஏற்படும் அபாய நேர்வு மதிப்பெண் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அவர்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன. (Scientific Reports.).

 

​​மரபணு அபாய நேர்வு மதிப்பெண் என்றால் என்ன? எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது, மரபணு அபாய நேர்வு மதிப்பெண் டைப் - 1 நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அறியப்பட்ட விரிவான மரபணுத் தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. ஒருவருக்கு டைப் -1 நீரிழிவு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க உதவும் வகையில் நீரிழிவு நோயறிதலின் போது இந்த மதிப்பெண் பயன்படுத்தப்படலாம்.

"சரியான நீரிழிவு வகையைக் கண்டறிவது மருத்துவர்களுக்கு கடினமான சவாலாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் எந்த வயதிலும் வகை 1 நீரிழிவு நோய் ஏற்படலாம் என்பதை இப்போது நாம் அறிவோம். இந்தப் பணி இந்தியாவில் இன்னும் கடினமானது, ஏனெனில் குறைந்த உடல் நிறை குறியீட்டு எண் (BMI) உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. எக்ஸிடெர் மருத்துவப் பள்ளி மருத்துவர், டாக்டர் ரிச்சர்ட் ஓரம், மரபணு அபாய நேர்வு மதிப்பெண் இந்தியர்களுக்கு ஒரு சிறந்த கருவியாகும் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (diabetic ketoacidosis) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், சிறப்பான ஆரோக்கியம் பெறவும், தேவையான சிகிச்சையைப் பெற மக்களுக்கு உதவ முடியும் ”என்று கூறினார்.

புனேவின் KEM மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யஜ்னிக்கும், டாக்டர் ஓரம் அவர்களின் கருத்தில் உடன்படுகிறார். இளம் இந்தியர்களில்  நீரிழிவு நோய் காரணமாக அதிகரித்து வரும் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு நீரிழிவு வகையை சரியாகக் கண்டறிவது இன்றியமையாதது என்றும் அதன் மூலம்  நீண்டகால உயிரியல், சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களில் டைப் 1 நீரிழிவு நோய் வருவதைக் கணிக்க இந்த ஆய்வு பயன்படுத்தப்படலாம் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்திய மக்கள்தொகையின் மரபணு வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, ஆய்வின் முடிவுகள் நாட்டின் பிற இனத்தவர்களிடமும் சரிபார்க்கப்பட வேண்டும். தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் CSIR- செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலின் மையத்தின் (CCMB) இயக்குர் டாக்டர் ராகேஷ் கே மிஸ்ரா, இந்தியாவில் “டைப் -1 நீரிழிவு நோயாளிகளில், 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருப்பதால், டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து, டைப் -1 நீரிழிவு நோயை நம்பத்தகுந்த முறையில் கண்டறிய மரபணு சோதனைக் கருவி நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

*****
 



(Release ID: 1636443) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Manipuri