மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

“வல்லமை வெல்லுமே” திட்டம் மனிதவள - விளையாட்டுத் துறைகளின் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Posted On: 03 JUL 2020 8:40PM by PIB Chennai

மத்திய அரசு  உருவாக்கிய வல்லமை இந்தியா பிரசாரம் (Fit India campaign) இன்று (ஜூலை 3) தொடங்கப்பட்டது. இந்தப் பிரசாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ்குமார் பொக்ரியால் நிஷாங்க், விளையாட்டுஇளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் ஆன்லைனில் உரையாடினர்.

வல்லமை இந்தியா பிரசாரத்தின் (Fit India campaign) கீழ்வல்லமை இந்தியா வெல்லுமே” (Fit Hai To Hit Hai India) என்ற பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில், ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீராங்கனை பி.வி. சிந்து, இந்திய கால்பந்தாட்ட அணியின் தலைவர் சுனீல் சேத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

பங்கேற்ற அனைவரும் மக்கள் வலிமையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விவரித்தனர். இதுபோன்ற வல்லமை இந்தியா பிரசாரத்தை (Fit India campaign) ஒட்டி, பல நிகழ்ச்சிகளை இந்திய விளையாட்டு ஆணையகமும், மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து நடத்துகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ்குமார் பொக்ரியால் பேசியதாவது:

இந்த வல்லமை இந்தியா பிரசாரத்தில் (Fit India campaign) குறுகிய காலத்திலேயே ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஏராளமானோர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

வல்லமை இந்தியா செயல்பாட்டுத் திட்டத்தின் (Fit India Active Day program) கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புதிதாக உடற்பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் நிஷாங்க் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏப்ரல் மாதம் அறிவித்தது.

நாடு முழுவதும் உள்ள 13,868 பள்ளிகள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் இணைந்துள்ளன. அவற்றுள் 11,682 பள்ளிகள் வல்லமை இந்தியா கொடியைப் (Fit India flag) பெற்றுள்ளன. தொற்று அபாயம் உள்ள இந்த நிலையில், நாம் அனைவரும் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதைப் போல் மாணவர்களும் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் நோயை எதிர்த்து வெற்றியடைய முடியும் என அறிவுறுத்த வேண்டும். ஆரோக்கியம் உள்ளவரிடம் உள்ள நோய் எதிர்ப்பு அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரும் உடல்நலத்தையும் சுகாதாரப் பழக்க வழக்கங்களையும் அன்றாட நடைமுறையில் இணைத்துக் கொள்வர் என்று நம்புகிறேன்என்று ரமேஷ்குமார் பொக்ரியால் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கிரண் ரிஜுஜு பேசியதாவது:

பாரதப் பிரதமர், நம் நாட்டின் அனைத்து மக்களும் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று  தொடர்ந்து உத்வேகம் ஊட்டி வருகிறார்.

இந்தியா வலிமையாக இருந்தால் தான் இந்தியா முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடும் என்று உறுதிபட நம்புகிறோம். இந்த நிலையில் வல்லமை இந்தியா பிரசாரத்தை மட்டும் நாங்கள் தொடங்கவில்லை. யோகாசனத்தின் முக்கியத்துவத்தையும் உலகுக்குத் தெரிவித்து வருகிறோம்.

இத்தகைய நிலையில், அரசு தற்போது குழந்தைகளையும் வல்லமை இந்தியா திட்டத்தில் இணைத்து வருகிறது. குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். இந்த வல்லமை இந்தியா பிரசாரத்தின் மூலம் அவர்கள் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் வலிமையோடு இருக்கும்படி பாடுபட்டு வருகிறோம்

இவ்வாறு ரிஜுஜு பேசினார்.

மாணவர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கும் இந்தப் பிரசார இயக்கத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இணைந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற பாட்மின்டன் விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்து, இந்தியக் கால்பந்தாட்ட அணையின் தலைவர் சுனீல் சேத்ரி ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.

****



(Release ID: 1636395) Visitor Counter : 167


Read this release in: Punjabi , English , Hindi , Manipuri