விவசாயத்துறை அமைச்சகம்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 2 ஜுலை 2020 வரை 1,32,777 ஹெக்டேர் பரப்பளவில், வட்டார வெட்டுக்கிளி அலுவலகங்கள் மூலம் வெட்டுக்கிளி கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன , 1,13,003ஹெக்டேர் பரப்பில் மாநில அரசுகளே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன

Posted On: 03 JUL 2020 6:40PM by PIB Chennai

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில், 11 ஏப்ரல், 2020 தொடங்கி,  2 ஜுலை 2020 வரைவட்டார வெட்டுக்கிளி அலுவலகங்கள் மூலம், வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   2 – 3 ஜுலை, 2020-க்கு இடைப்பட்ட இரவில் மட்டும்ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், நகோர், சிகார், ஜெய்ப்பூர் மற்றும் ஆல்வார் ஆகிய 7 மாவட்டங்களுக்குட்பட்ட 19 இடங்களிலும்மத்தியப்பிரதேசத்தின் திகாம்கர் மாவட்டத்திற்குட்பட்ட 2 இடங்களிலும், வட்டார வெட்டுக்கிளி அலுவலகங்களால், இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது

அதே காலகட்டத்தில், மாநில அரசுகளும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களில்,  2 ஜுலை2020 வரை, 1,13,003 ஹெக்டேர் பரப்பளவில், மாநில அரசுகளால் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.  2 – 3ஜுலை, 2020க்கு இடைப்பட்ட இரவில் மட்டும், ராஜஸ்தான் மாநிலம் கரோலி, சவாய் மாதோபூர், பாலி மற்றும் தோல்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 4 இடங்களில், சிறிய அளவிலான கூட்டங்களாகவும்ஆங்காங்கேயும் பரவியிருந்த வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  அம்மாநில வேளாண்மைத்துறை மேற்கொண்டது.   

 

ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச  மாநிலங்களில் தற்போது 60 வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள்மருந்து தெளிப்பான் இயந்திரங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனமத்திய அரசுப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இது தவிர, ராஜஸ்தான் மாநிலம் பார்மர், ஜெய்சால்மர், பிகானிர், நகோர் மற்றும் பலோடி பகுதிகளில் உள்ள உயரமான மரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லித் தெளிப்பான் கருவிகளை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில்,  12 டிரோன்களுடன் (குட்டி விமானங்கள்) 5 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

  

குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பீகார் மற்றும் ஹரியானாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பயிர் பாதிப்பு இல்லைஎனினும், ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் குறைந்த அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.                                                                            

*****

 



(Release ID: 1636271) Visitor Counter : 179