பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் கத்துவா, உதம்பூர், ரீசி, ராம்பான், தோடா, கிஷ்ட்வார் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பரிசீலனை செய்தார்

Posted On: 02 JUL 2020 8:32PM by PIB Chennai

உதம்பூர்- கத்துவா -தோடா ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் கோவிட் பெருந்தொற்றையடுத்து இந்த மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தேசிய திட்டங்கள் உட்பட பல வளர்ச்சிப்பணிகள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.

 

துணை ஆணையர்கள், மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் கத்துவா, உதம்பூர், ரீசி, ராம்பான், தோடா, கிஷ்ட்வார் ஆகிய 6 மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களின் நிலை குறித்து அவர் விவாதித்தார். ஒவ்வொரு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு திட்டப் பணிகளை விரைவில் முடிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

 

மாவட்டத்தைப் பொறுத்தவரை முதன்முறையாக உருவாக்கப்படும் விதை பதப்படுத்தும் ஆலைக்கான பணிகள் முடிவடைந்துவிட்டன என்றும், இன்னும் சில வாரங்களில் செயல்படத் துவங்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல வட இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்படவுள்ள உயிரி தொழில்நுட்ப பூங்காப் பணிகளும் கோவிட் காரணமாக தடைபட்டிருந்தன.  தற்போது இந்தப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் இது செயல்படத் துவங்கும் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பதன்கோட் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிப் பாதையில் இருந்து ஆறு வழி பாதையாக விரிவுபடுத்துவதற்காக ஆய்வு நடத்தப்பட்டு வருவதன் காரணமாக நெடுஞ்சாலை கிராமம் தொடர்பான பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

கத்ரா-தில்லி விரைவு வழிப்பாதையிலான பணிகள் துவங்கி விட்டன. நில ஆர்ஜிதப் பணிகளும் ஆரம்பித்துவிட்டன.

*******



(Release ID: 1636125) Visitor Counter : 108


Read this release in: English , Urdu , Hindi , Manipuri