பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சமுத்ரா சேது
ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல், 687 இந்திய குடிமக்களை, ஈரானில் இருந்து தாயகத்திற்கு மீட்டு வந்தது
Posted On:
01 JUL 2020 9:08PM by PIB Chennai
“ஆபரேஷன் சமுத்ரா சேது”-க்காக இந்திய கடற்படையால் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல், ஈரானில் சிக்கி தவித்த 687 இந்தியர்களை மீட்டு, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை (ஜூலை 01) தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்திய கடற்படை கப்பல்களில் இதுவரை 920 இந்திய குடிமக்கள் ஈரானில் இருந்து தாயகத்திற்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்களை தாயகத்திற்கு கப்பலில் மீட்டு வருவதற்கு உதவியது.தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே, கப்பலில் இந்தியர்கள் ஏற்றப்பட்டனர். அவர்களது கடல் பயணத்தின்போது கோவிட் தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டன.
ஈரானில் இருந்து திருப்பி அழைத்து வரப்பட்ட இந்திய அகதிகளை தூத்துக்குடியில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு விரைவாக அனுப்பி வைக்கவும், சுகாதாரப் பரிசோதனை, குடியேற்றம் மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இவர்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 3992 இந்திய குடிமக்கள் மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தற்போது பரவி வரும் வைரஸ் நோய் தொற்று காலத்தில், இந்திய கடற்படையினரால் இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
*****
(Release ID: 1635868)
Visitor Counter : 265