சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சர்வதேச விதிமுறைகளுக்கு உகந்த வகையில் தரப்படுத்தப்பட்ட போக்குவரத்து வாகனங்களின் அளவுகள் குறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது

Posted On: 01 JUL 2020 5:29PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 1989ஆம் ஆண்டின் மத்திய வாகன விதிகளின் வாகனங்களின் அளவுகள் குறித்த 39வது விதிமுறையை திருத்துவதற்கென ஜிஎஸ்ஆர்  எண். 414(ஈ) என்ற அறிவிக்கையை 2020 ஜூன் 26 அன்று வெளியிட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள் வாகனங்களின் அளவுகளை தரப்படுத்துவதோடு அவற்றை சர்வதேச தரமுடையதாகவும் மாற்ற வழியேற்படுத்தும். அமைச்சகத்தின் இந்த மேம்படுத்தப்பட்ட வாகன அளவுகள் வரையறுக்கப்பட்ட எடைக்குள்ளேயே அவை கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லவோ அல்லது கூடுதலான எடையை எடுத்துச் செல்லவோ உதவும் வகையில் தளவாடங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையே ஆகும்.

இந்தத் திருத்தங்கள் இதுவரை வரையறுக்கப்படாத எல்1 மற்றும் எல்2 எனப்படும் இரு சக்கர வாகனங்களின் அளவு விவரங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின்படி எல்2 வாகனங்களின் நீளம் அதிகபட்சம் 4 மீட்டராகவும் உயரம் 2.5 மீட்டராக இருக்கும். அதே நேரத்தில் எல்5எம்/எல்5என் எனப்படும் மூன்று சக்கர வாகனங்களின் உயரமும் 2.2 மீட்டரிலிருந்து 2.5 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே காற்றுக் குழாய் மூலமாக இயக்கப்படும் தொடர்வண்டி (ட்ரெய்லர்)யை இந்த அறிவிக்கை நீர்வழிக் குழாய் மூலமாக இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இணையான ஒன்றாகச் செய்கிறது. ஏற்றிச் செல்லும் எடையை அதிகரிக்காமல் இந்த வண்டிகள் 50 மீட்டர் வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் விதிவிலக்கான நீளத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இந்த மாற்றம் வழிவகுக்கும்.

தேர்வு செய்யப்பட்ட ஒரு சில வழித்தடங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க 25.25 மீட்டர் நீளத்திற்கு சாலைகளில் செல்லும் தொடர் வண்டிகளின் நீளம் வரையறுக்கப்பட்டுள்ளது.

என் வகைப்பட்ட (சரக்கு வண்டிகள்) வண்டிகளின் அளவு, குறிப்பாக அவற்றின் உயரம் திருத்தப்பட்டுள்ளது. சரக்குப் பெட்டக வகையிலான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம் வகைப்பட்ட வண்டிகளின் அளவு, குறிப்பாக அவற்றின் உயரம் 3.8 மீட்டரிலிருந்து 4 மீட்டராகத் திருத்தப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவிற்கான ஐநா பொருளாதார ஆணையத்தின் சர்வதேச தரமுறைக்கு ஒத்ததாகும். எனினும் விமான நிலையங்களில் பயணிகளுக்கான பேருந்துகளின் உயரம் தற்போதுள்ள 3.8 மீட்டர் அளவிற்கே நீடிக்கும்.

இரண்டு அச்சுக்களைக் கொண்ட எம்3 வாகனங்களின் (பேருந்துகள்) நீளம் 12 மீட்டரிலிருந்து 13.5 மீட்டராக திருத்தப்பட்டுள்ளது.

என் வகைப்பட்ட சரக்கு வண்டிகளைப் பொறுத்தவரையில் அவற்றின் உயரம் 3.8 மீட்டரிலிருந்து 4 மீட்டராகத் உயர்த்தப்படுகிறது. எனினும் என்1 வகைப்பட்ட வாகனங்களின் உயரம் (நிகர வாகன எடை 3.5 டன் வரையிலான என்1 வாகனங்கள் பயன்பாட்டிற்கான வாகனங்கள் ஆகும்) 3 மீட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ தரவீட்டிற்கு உட்பட்ட 45 அடி நீளமுள்ள கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் வகையில் ட்ரெய்லர்களின் நீளம் 18 மீட்டரில் இருந்து 18.75 மீட்டர்களாக திருத்தப்பட்டுள்ளது. ஒரு சில விதிவிலக்குகளுடன் இந்த ட்ரெய்லர்களின் உயரமும் 3.8 மீட்டரிலிருந்து 4 மீட்டராகத் திருத்தப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ தரவீட்டிற்கு உட்பட்ட/ சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்கின்ற அல்லது  வடிவமைக்கப்பட்ட/ குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்கின்ற அல்லது சரக்குப் பெட்டக வடிவத்தைக் கொண்ட செமி ட்ரெய்லர்களின் உயரம் 4.52 மீட்டருக்கு மேலாக இருக்கக் கூடாது.

ட்ரக் ட்ரெய்லர்கள்/ வாகனங்களை ஏற்றிச் செல்வதற்காக வாகன தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் ட்ராக்டர் ட்ரெய்லர்கள். கட்டுமானக் கருவிகளை இயக்கும் வாகனங்கள்/ கால்நடைகள்/ வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் மூடிய சட்டகம் உள்ள வண்டிகள் அல்லது தனித்தனியாக பிரிக்க முடியாத வகையில் ஒரே பொருளாக எடுத்துச் செல்ல பயன்படுத்தும் வண்டிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இந்த வண்டிகளின் மொத்த உயரம் 4.75 மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது.

கண்ணுக்குப் புலப்படாத எடையைப் பொறுத்தவரையில் கீழ்க்கண்ட அளவுகளைக் கொண்ட வாகனங்களுக்கு கீழ்க்கண்ட வகையில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது:

  • 2.6 மீட்டர் அகலமும், 4.75 மீட்டர் வரையிலான உயரமும் உள்ள வாகனங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் ஒவ்வொரு பக்கவாட்டிலும் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ள பொருட்கள் 200 மீட்டர் வெளியே துருத்திக் கொண்டிருப்பதற்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுகிறது.
  • காற்றாலைகளுக்கான சிறகுகள் போன்று மிகவும் விதிவிலக்கான நீளமுடைய பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரெய்லர் வாகனங்களைப் பொறுத்தவரையில் நீளம் நீட்டிக்கத்தக்க ட்ரெய்லர்களும் இதில் அடங்கும்.

 

*****



(Release ID: 1635864) Visitor Counter : 401