உள்துறை அமைச்சகம்

இன்று பட்டயக் கணக்காளர்கள் நாளையொட்டி அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ட்விட்டரில் வாழ்த்து

Posted On: 01 JUL 2020 3:55PM by PIB Chennai

இன்று பட்டயக் கணக்காளர்கள் நாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 “நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றி வரும், திறமைமிக்க பட்டயக் கணக்காளர்கள் சமூகம் குறித்து இந்தியா பெருமைப்படுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் அவர்களது பங்கு அளப்பரியது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1635677) Visitor Counter : 122