கலாசாரத்துறை அமைச்சகம்

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சண்டிகர் மண்டல அலுவலகம் “ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம்” தொடர்பான இணைய வழிக் கருத்தரங்கை இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய இணை மாநிலங்களின் கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றை காட்சிப்படுத்தி ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 30 JUN 2020 7:43PM by PIB Chennai

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சண்டிகர் மண்டல அலுவலகம் “ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம்” தொடர்பான இணைய வழிக் கருத்தரங்கை நடத்தியது. இதில் இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை அழகுற காட்சிப்படுத்தப்பட்டன. இந்த இணைய வழிக் கருத்தரங்கை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி தேவ் ப்ரீத் சிங் வழிநடத்தினார்.

 

மாச்சலப் பிரதேசத்தின் கலாச்சார நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் திருமிகு சைலஜா கண்ணா, இமாச்சலப் பிரதேசத்தின் நாட்டுப்புறப் பாடல்களின் உயரிய பாரம்பரியம் குறித்து விவாதித்த நிபுணர் குழுவில் ஒருவராக பங்கேற்றார். அவர் தமது தொடரில் நாட்டுப்புறப்பாடல்கள்; அதுசார்ந்த இசைக்கருவிகள்; அதன் தனித்தன்மை, ஆகியவை குறித்து உரையாற்றினார். கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞரும் ஆராய்ச்சியாளரும் ஆசிரியருமான டாக்டர் நீனா பிரசாத், கேரளாவில் உள்ள பல்வேறு கலை வடிவங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார். கேரளத்தின் பண்டைய சம்ஸ்கிருத கலையான கூடியாட்டம்; கேரளத்தின் நடனமான மோகினியாட்டம் ஆகியவை குறித்தும் அவர் விளக்கினார்

 

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் திரு எஸ் வெங்கடேஷ்வர் பேசுகையில் இரு மாநில மக்களும் அடிக்கடி அடுத்த மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், கலாச்சார பன்முகத்தன்மை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த இணை மாநிலங்களில் உள்ள மாணவர்களின் நன்மைக்காக மாணவர் பரிமாற்ற திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். ஹரியானாவில் உள்ள ஜி டி கோயங்கா உலக பள்ளி, மாணவர்கள் இந்த இணைய வழிக் கருத்தரங்கில் பங்கேற்றனர். இந்தத் தொடர் குறித்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இத்தொடரில் பேசிய பேச்சாளர்கள் அளித்த உரைகள் நிறைய தகவல்கள் அளிப்பதாகவும், அறிவை வளப்படுத்த உதவும் வகையிலும் இருந்தன என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

 



(Release ID: 1635575) Visitor Counter : 111