நிதி அமைச்சகம்

2020-21 நிதியாண்டில் மே 2020 வரையிலான இந்திய அரசின் நிதிக்கணக்குகள் குறித்த மாதாந்திர மீளாய்வு.

Posted On: 30 JUN 2020 5:32PM by PIB Chennai

மே 2020 வரை இந்திய அரசின் மாதாந்திர நிதிக்கணக்கு தொகுக்கப்பட்டு அதற்கான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளனஅதன் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன:-

இந்திய அரசு மே 2020 வரை ரூ.45,498 கோடியை (மொத்த வரவுகளுக்கான 2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 2.03%) வருவாயாக பெற்றுள்ளதுஇதில் வரிவருவாய் (மத்திய அரசுக்கான நிகரத்தொகை) ரூ.33,850 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.10,817 கோடி மற்றும் கடன் அல்லாத மூலதன வருவாய் ரூ.831 கோடி ஆகியன உள்ளடங்கும்கடன் அல்லாத மூலதன வருவாய் என்பதில் கடன்களைத் திரும்ப பெற்றதும் (ரூ.831 கோடி) உள்ளடங்கும். வரிவருவாயில் பங்கினைப் பிரித்துத் தருதல் என்ற முறையில் இந்திய அரசு மாநில அரசுகளுக்கு இந்தக் காலகட்டத்தில் ரூ.92,077 கோடியை வழங்கியுள்ளதுஇது கடந்த ஆண்டை விட ரூ.7,010 கோடி குறைவாகும்.

இந்திய அரசின் மொத்தச் செலவினம் ரூ.5,11,841 கோடி ஆகும் (2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 18.82%).  இதில் ரூ.4,56,635 கோடி வருவாய் கணக்கு மற்றும் ரூ.55,206 கோடி மூலதனக் கணக்கு ஆகும்மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.78,265 கோடி வட்டி செலுத்துவதற்கும் ரூ.67,469 கோடி முக்கியமான மானியங்களுக்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.

****



(Release ID: 1635444) Visitor Counter : 243