புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்கு பருவமழை தேசம் முழுவதையும் இன்று ஆக்ரமிக்கும், 26 ஜூன் 2020: இந்திய வானிலை ஆய்வு துறை.

Posted On: 26 JUN 2020 6:03PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) புது தில்லியில் உள்ள தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / பிராந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது:

தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாபின் மீதமுள்ள பகுதிகளுக்கு மேலும் முன்னேறியுள்ளது, இதனால் 26, ஜூன் 2020 அன்று இது நாடு முழுவதையும் ஆக்கிரமிக்கும்.

  • மேற்கூறிய சாதகமான வானிலை நிலைமைகளுடன், ஜூன் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கிழக்கு இந்தியப் பகுதிகளில் மிதமான மழை / இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், பீகார், துணை இமயமலை மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதன் பின்னர் (ஜூன் 28க்குப் பிறகு) மழையின் அளவும், தீவிரமும் குறைய வாய்ப்புள்ளது.  
  • 26 மற்றும் 27ஆம் தேதிகளில் துணை இமயமலை மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் பகுதிகளின் சில இடங்களில் மிகவும் கன மழையுடன் (cm 20 செ.மீ) மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் ஜூன் 28, 2020 அன்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் மிக அதிக மழைப்பொழிவும் சில இடங்களில் கன மழை பெய்யும், 28 ஆம் தேதி சில இடங்களில் கன மழையும், மற்றும் ஜூன் 29, 2020 ஆம் தேதி சில இடங்களில் கன மழையுடன் அதிக மழைப்பொழிவும் இருக்க வாய்ப்புள்ளது.
  • 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பீகாரில் சில இடங்களில் அதிக மழைப்பொழிவும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். 28ஆம் தேதி சில இடங்களில் அதிக மழைப்பொழிவும்  மற்றும் ஜூன் 29, 2020 ஒரு சில இடங்களில் அதிகளவு மழைப்பொழிவும் இருக்கும்.
  • 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், அதிக மழைப்பொழிவும் இருக்கும், மேலும், ஜூன் 28, 2020 அன்றும் ஒரு சில இடங்களில் அதிகளவு மழைப்பொழிவு இருக்கும்.

 

******



(Release ID: 1635019) Visitor Counter : 183


Read this release in: Punjabi , English , Hindi , Bengali