விவசாயத்துறை அமைச்சகம்

முக்கிய பயிர்கள் விதைப்பில் நல்ல முன்னேற்றம்.

Posted On: 26 JUN 2020 8:46PM by PIB Chennai

நாட்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் பெய்த மழை அளவு 155.2 மில்லி மீட்டர் எனப் பதிவாகியுள்ளது.  இந்தக் காலகட்டத்தில் பொதுவாக 128.2 மி.மீ. மழை அளவே பதிவாகும். இதனால், பயிர்களுக்கு காரீப் பருவத்தில் விதைப்பதும் அதிகரித்துள்ளது.  விவரம்:

அரிசி: 31.71 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 32.05 லட்சம் ஹெக்டேரில் விதைக்கப்பட்டது.

பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் 19.40 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 11.45 ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டன.

எள், கம்பு போன்ற தானியங்கள்: 47.96 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்படும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 26.09 லட்சம் ஹெக்டேரில் விதைக்கப்பட்டன.

எண்ணெய் வித்துக்கள்:  83.31 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இந்த ஆண்டு விதைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 24.07 ஹெக்டேர் பரப்பில்தான் விதைக்கப்பட்டன.

கரும்பு: கரும்பு 46.69 ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 47.77 ஹெக்டரில்தான் விதைக்கப்பட்டது.

சணல் மற்றும் கீரை: 5.88 ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 6.98 ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டது.

பருத்தி: இந்த ஆண்டு 71.69 ஹெக்டேர் பரப்பில் பருத்திப் பயிர் விதைகள் விதைக்கப்படுகின்றன. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 39.23 ஹெக்டேர் பரப்பில்தான் விதைக்கப்பட்டன.



(Release ID: 1635011) Visitor Counter : 176


Read this release in: English , Hindi , Manipuri , Bengali