பாதுகாப்பு அமைச்சகம்

ஃபீல்டு மார்ஷல் மானேக் ஷாவுக்கு அஞ்சலி.

Posted On: 27 JUN 2020 8:09PM by PIB Chennai

இந்தியப் படைத் தளபதியாக இருந்த, மறைந்த பத்மவிபூஷண் ஃபீல்டு மார்ஷல் மானேக் ஷாவின் 12வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டதுஉதகமண்டலம் பார்ஸி ஜொராஷ்ட்ரியன் சமாதியில் உள்ள அவரது கல்லறைக்கு வெலிங்டன், பாதுகாப்பு சேவைப் பணியாளர் கல்லூரி (Defence Services Staff College, Wellington) சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் சார்பில் கல்லூரியின் கமாண்டண்ட் லெப். ஜெனரல் ஓய்வி.கே. மோகன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பார்சி சமுதாயத்தினர் பலர் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 1914ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்த ஜெனரல் மானேக் ஷா, இந்திய ராணுவத்தில் நாற்பது ஆண்டுகள் இடைவிடாமல் பணி செய்திருக்கிறார். இரண்டாம் உலகப்போரில் இளம் கேப்டனாக இருந்தபோது பர்மாவில் நடந்த போரில் காயமடைந்தார். அவரது தீரச் செயலுக்காக 1942ஆம் ஆண்டு ராணுவச் சிலுவை (Military Cross) விருது பெற்றார். 1946-47ஆம் ஆண்டில் அவர் ராணுவ நடவடிக்கை இயக்ககத்தில் (Military Operations Directorate) நியமிக்கப்பட்டார். அப்போது பாகிஸ்தான் பிரிவினையின் போது ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்தார். அதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உடுருவலை எதிர்கொள்ளப் போராடினார். 1962ஆம் ஆண்டுப் போரிலும் சிறந்த சேவை ஆற்றியுள்ளார். மத்தியப்பிரதேசம்  மஹவ், காலாட்படை பள்ளி கமாண்டன்ட் (Infantry School), வெலிங்டன் பாதுகாப்பு சேவைப் பணியாளர் கல்லூரி (Defence Services Staff College, Wellington) ஆகிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 1968ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார்.



(Release ID: 1634971) Visitor Counter : 186