நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி வரை ஏதுமில்லை என்ற கணக்கைக் குறுஞ்செய்தி மூலம் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு அரசின் எளிய நடைமுறை
Posted On:
27 JUN 2020 8:07PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் வரும் ஜூலை முதல் வாரத்தில் வரி ஏதுமில்லை என்ற கணக்கை (NIL statement) தாக்கல் செய்ய அதற்கான ஜிஎஸ்டிஆர்-1 (FORM GSTR-1) என்ற படிவத்தை குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே தாக்கல் செய்ய புதிய எளிய வழிமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, ஜிஎஸ்டி வரி நிலுவை இல்லை என்பதற்கான ஜிஎஸ்டிஆர்-1 (FORM GSTR-1) என்ற படிவத்தைக் குறுஞ்செய்தியாகத் தாக்கல் செய்வதன் மூலம் 12 லட்சம் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது தொடர்பான பணி எளிதாகும் என்று மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs) தெரிவித்துள்ளது. தற்போது, வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி பொது இணையதள வெளியில் தங்களது கணக்கு தொடர்பாக பகுதியை மாதந்தோறுமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ திறந்து அதற்கான படிவத்தில் (FORM GSTR-1) தாக்கல் செய்யவேண்டும். இனி, வரி செலுத்தத் தேவையில்லை என்போர் இப்படி இணையதளத்தின் மூலமாகப் படிவத்தை நிரப்பத் தேவையில்லை. கைபேசியின் குறுஞ்செய்தி போதும். கணக்குத் தாக்கல் செய்யப்பட்டதை உறுதி செய்வதோ, படிவத்தின் நிலையை அறிவதோ ஜிஎஸ்டி இணையதளத்தில் ஜிஎஸ்டிஎன் கணக்கை (GSTIN account) திறந்து அறியலாம். அதற்கான வழி விவரம்: Services>Returns>Track Return Status.
இந்தக் குறுஞ்செய்தி மூலம் விவரத்தைத் தாக்கல் செய்வது கடந்த ஜூன் 8ஆம் தேதியே தொடங்கிவிட்டது. வரி செலுத்துவோர் அதற்கான கணக்குத் தாக்கல் படிவத்தின் (NIL FORM GSTR-3B) மூலம் குறுஞ்செய்தி வழியாகத் தாக்கல் செய்யும் வசதி உள்ளது.
வரி செலுத்துவோர் வரியில்லை என்ற விவரத்தைக் குறுஞ்செய்தி மூலம் தாக்கல் செய்ய விரும்புவோர் அதற்கான வசதியை அமைப்பதற்கு 14409 என்ற எண்ணுக்கு NIL என்று பதிவிட்டு இடைவெளி விட்டு R1 என்று பதிவிட்டு, இடைவெளி விட்டு தங்களது ஜிஎஸ்டிஎன் எண்ணைப் பதிய வேண்டும், பின்னர் இடைவெளி விட்டு, MMYYYY என்ற முறையில் வரி செலுத்துவதற்கான காலத்தையும் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
உதாரணத்திற்கு NIL R1 09XXXXXXXXXXXZC என்பது போல் குறிப்பட்டு, மாதாந்திர வரியை ஏப்ரலில் செலுத்த வேண்டுமானால், 04/2020 என்ற காலத்தைக் குறிப்பிடவேண்டும்.
அவ்வாறு செய்த பின், அவர்களுக்கு 6 டிஜிட்டல் சங்கேத எண் 30 நிமிடத்துக்குள் வரும். அதற்கேற்ப தங்களது வரியின்மைக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை முழுமையாகப் பூர்த்தி செய்துவிட்டால், கணக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான ரசீது குறுஞ்செய்தியாக வரும்.
இதே போன்ற வழியைப் பின்பற்றி வரி செலுத்துவோர் FORM GSTR-3B படிவத்தையும் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு : www.gst.gov.in
****
(Release ID: 1634966)
Visitor Counter : 234