நிதி ஆணையம்

மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்துடன் நிதி ஆணையத்தின் கூட்டம்

Posted On: 25 JUN 2020 5:58PM by PIB Chennai

  2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு தனது பரிந்துரைகளை வடிவமைப்பதற்காக, நிதி ஆணையம் மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்துடனான கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத் ராஜ் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார்.   மாநிலத்தின் நிதி ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சிகளுக்கும், ஆதார வளங்களை அளிப்பதற்காக அரசின் தொகுப்பு நிதியை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.  ரூ.60,750 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு தவணைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

******


(Release ID: 1634417) Visitor Counter : 196