பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யத் துணைப் பிரதமருடன் திறனாய்வு செய்கிறார்

Posted On: 23 JUN 2020 9:09PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் ரஷ்யக் கூட்டமைப்பின் துணைப் பிரதமர் திரு யூரி போரிசோவ் உடனான இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பை இன்று திறனாய்வு செய்தார். திரு போரிசோவ் வர்த்தக, பொருளாதார மற்றும் அறிவியல் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய – ரஷ்ய அரசுகளுக்கிடையிலான ஆணையத்தின் இணைத் தலைவராக உள்ளார். அவர் பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் மட்டக் குழுவுடன் இணைத் தலைவராக உள்ளார். இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த அவர்களின் கலந்துரையாடல்கள் மிகவும் நேர்மறையானவை மற்றும் பயனுள்ளவை.

தொற்றுநோயின் அனைத்து சிரமங்களும் இருந்தபோதிலும், இந்தியா-ரஷ்யா இருதரப்பு உறவுகள் பல்வேறு மட்டங்களில் நல்ல தொடர்புகளை வைத்திருக்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்ச்ர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் தனிச் சுதந்திரமான போர்திறம் வாய்ந்த சலுகைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பாதுகாப்பு உறவு அதன் முக்கியமான தூண்களில் ஒன்றாகும்.

வெற்றி நாள் அணிவகுப்பின் 75வது ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில் 75 வது வெற்றி தின புனித விழாவிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொதுவான பாதுகாப்பிற்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்த ரஷ்ய மக்களை,, குறிப்பாக வீரர்களை வாழ்த்தினார்.

முன்னதாக, இன்று அதிகாலை, பாதுகாப்புச் செயலாளர் டாக்டர். அஜய் குமார் ரஷ்யத் துணைப் பாதுகாப்பு மந்திரி கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமினுடன் கலந்துரையாடினார். அப்போது இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய வளர்ச்சியின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

*****(Release ID: 1633873) Visitor Counter : 206