புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
சர்வதேச ஒப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2017 முடிவுகளின் படி, வாங்கும் திறன் சம நிலைகளும், இந்தியப் பொருளாதார அளவும்.
Posted On:
23 JUN 2020 2:00PM by PIB Chennai
உலகில் பல்வேறு பொருளாதார நிலைகளில், வாழ்க்கைச் செலவு அளவில் உள்ள வேறுபாடுகளை சமன் செய்வதற்கான சர்வதேச ஒப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2017ஆம் குறிப்பாண்டிற்கான புதிய வாங்கும் திறன் சம நிலைகளை, உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த சர்வதேச ஒப்பீட்டுத் திட்டத்தில், 2017ஆம் ஆண்டின் சுழற்சியில் உலக அளவில் 176 பொருளாதாரங்கள் பங்கேற்றன. இந்திய ரூபாயின் வாங்கும் திறன் சமநிலை மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 2011இல் 15.55 ஆக இருந்தது 2017இல் 20.65 ஆக இருந்தது. இதே காலத்தில் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் பணப் பரிமாற்ற விகிதம் 46.67 ரூபாயாகவும் தற்போது 65.12 ரூபாயாகவும் இருக்கிறது. வாங்கும் திறன் சமநிலையின் சந்தைப் பரிமாற்ற விகிதத்துடனான விலை அளவுக் குறியீட்டு விகிதம், பல்வேறு பொருளாதாரங்களில் விலை அளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன்படும் விகிதமாகும். இது இந்தியாவில் 2011ஆம் ஆண்டில் 42.99 ஆகவும், 2017ஆம் ஆண்டில் 47.55 ஆகவும் உள்ளது. மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் மூன்றாவது இடம் என்றிருந்த தனது நிலையை, இந்தியா 2017ஆம் ஆண்டிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உலகின் மொத்தப் பொருளாதாரமான 119547 பில்லியன் டாலரில் 6.7 சதவிகிதம் - 8051 பில்லியன், இந்தியப் பொருளாதாரமாகும். சீனா 16.4 சதவிகிதம். அமெரிக்கா 16.3 சதவிகிதம். உலக அளவில் மொத்த மூலதனத்தை ஏற்படுத்துவது, உலக அளவிலான தனிநபர் நுகர்வு ஆகியவை, வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் உள்ளது.
மண்டல அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தை இந்தியா 2017ஆம் ஆண்டில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மண்டல மொத்த உள்நாட்டு உற்பத்தி வாங்கும் திறன் அடிப்படையில் 20.83 சதவீதமாக இருந்தது. ஹாங்காங் டாலர் 48395 பில்லியன் ஆசிய-பசிபிக் பகுதியில் மொத்த அளவு ஹாங்காங் டாலர் 232344 பில்லியன். இதில் சீனா 50.76 சதவிகிதம் (முதலிடம்) இந்தோனேஷியா 7.49 சதவிகிதம் (மூன்றாமிடம்).
மண்டல அளவிலான தனிநபர் நுகர்வு மற்றும் மண்டல அளவிலான மொத்த மூலதனத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா, இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஆசிய-பசிபிக் பகுதிகளில் பங்கேற்ற 22 பொருளாதாரங்களில், வாங்கும் திறன் சம நிலைகளில், இந்திய ரூபாய் ஹாங்காங் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 2011ஆம் ஆண்டில் 2.97 ஆக இருந்தது. தற்போது 2017ஆம் ஆண்டில் 3.43 ஆக உள்ளது. ஹாங்காங் டாலரிலிருந்து இந்திய ரூபாயாக மாற்றுவதற்கான விகிதம், இதே காலத்தில் 6 ரூபாயாக இருந்தது. தற்போது 8.36 ரூபாயாக உள்ளது. விலை அளவுக் குறியீடு இந்தியாவில் 2011ஆம் ஆண்டில் 71.00 ஆக இருந்தது தற்போது 2017ஆம் ஆண்டில் 64.00 ஆக உள்ளது
(Release ID: 1633707)