விவசாயத்துறை அமைச்சகம்

வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முக்கியமாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் மாநில வேளாண் துறைகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் ஒருங்கிணைந்து முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகின்றன.

Posted On: 22 JUN 2020 7:38PM by PIB Chennai

வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கை முக்கியமாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில். 62 தெளிப்பு உபகரணங்கள் (21 மைக்ரோநேர் மற்றும் 41 உல்வாமாஸ்ட்) வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்களால் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் 200 ஊழியர்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிறார்கள். அனைத்து வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்களிலும், ஜோத்பூரின் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பிலும் பத்து கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ள. திட்டமிடப்பட்ட பாலைவனப்பகுதிக்கு அப்பாலும் கூட, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், அஜ்மீர், வுசா மற்றும் சித்தோர்கர் ஆகிய இடங்களில் தற்காலிக அடிப்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; அதே போல மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி; மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில். பாலைவன வெட்டுக்கிளியை திறம்படக் கட்டுப்படுத்த தற்காலிக முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது மாநில வேளாண் துறைகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் கட்டுப்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தோ-பாக் எல்லைப்பகுதிகளில் இருந்து இரண்டும் பிகானேர் மற்றும் ஸ்ரீகங்கநகர் மாவட்டத்தில் தலா ஒரு வெட்டுக்கிளிக் கூட்டமும் வந்துள்ளதாக பதிவாகியுள்ளன. இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தற்போது, ​​முதிர்ச்சியடைந்த மஞ்சள் நிறமுடையற்றும் முதிர்ச்சியடையாத இளஞ்சிவப்பு வெட்டுக்கிளிகளின் கூட்டங்கள் ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், ஸ்ரீ கங்கநகர், ஜெய்ப்பூர், நாகூர் மற்றும் ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டங்கள், மத்தியப்பிரதேசத்தின் பன்னா மாவட்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன.

நிலைமை உயர் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படும் உதவிகளும் செய்யப்படுகின்றன.

21.06.2020 நிலவரப்படி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் 114,026 ஹெக்டேர் பகுதியில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

********



(Release ID: 1633617) Visitor Counter : 189