குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஜெகந்நாத் பூரி ராத் யாத்திரையின் புனித நிகழ்வில் துணை ஜனாதிபதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Posted On: 22 JUN 2020 8:24PM by PIB Chennai

ஜெகந்நாத் பூரி ராத் யாத்திரையின் புனித நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி செய்தியின் முழு உரை வருமாறு-

"ரத யாத்திரையின் இந்தப் புனித நிகழ்வில் எங்கள் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெகந்நாத் பூரி ர யாத்திரை ஒடிசாவின் மிகவும் பாரம்பரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருவிழா ஆகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் ஜெகந்நாதரின் வருடாந்திரப் பயணத்தை ரத யாத்திரை சித்தரிக்கிறது

ரத யாத்திரை திருவிழாவின் சிறப்பும், மகிமையும், 'ரதங்கள்' அல்லது ரதங்களின் சிறப்பும் பேரழகும் உண்மையிலேயே ஈடு இணையற்றது. கொவிட் -19 பரவுதலுக்கு எதிராக இந்தியாவும், உலகமும் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வருவதால், எங்கள் பாரம்பரிய விழாக்கள் அனைத்தையும் வீட்டில் கொண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த சூழ்நிலைகளில், இந்த ஆண்டு ஒரு சாதாரண கொண்டாட்டத்துடன் நாம் திருப்தியடைய வேண்டும்.

ரத யாத்திரையுடன் தொடர்புடைய புனிதமான மற்றும் உன்னதமான கொள்கைகள் நம் வாழ்க்கையை அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வளப்படுத்தட்டும்.

*******(Release ID: 1633612) Visitor Counter : 10