அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
திறந்த நட்சத்திரத் தொகுப்பில், மாறுபட்ட வயதுடைய நட்சத்திரங்கள் இணைந்திருக்க முடியும் என்ற ஆய்வு, பால்வெளி மண்டலத்தில் ஸ்டெல்லார் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு தடயத்தைக் கொடுக்கும்
Posted On:
21 JUN 2020 5:52PM by PIB Chennai
நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலத்தில் இருக்கும் மூலக்கூறு மேகங்களிலிருந்து உருவாகின்றன. நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் நட்சத்திரத் தொகுப்புகளில் உருவாகின்றன என்று நம்பப்படுகிறது. நட்சத்திர உருவாக்கப் பொறிமுறையைப் புரிந்து கொள்வதற்கான முக்கியமான தடயங்களை அவை உருவாக்குகின்றன. திறந்த நட்சத்திரத் தொகுப்புகள் என்பது ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட நட்சத்திரங்களின் அமைப்பு, இதில் நட்சத்திரங்கள் ஒரே மூலக்கூறு மேகங்களிலிருந்து பிறக்கின்றன. ஒரு தொகுப்பில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அது உருவாகும் நேரத்தில் அவற்றின் ஆரம்ப மூலக்கூறு எடையின் அடிப்படையில் பரிணாம வரிசையைப் பின்பற்றுகின்றன. பால்வெளி மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாமத்தை ஆராய்வதில் இந்த நட்சத்திரத் தொகுப்புகள் முக்கியம், ஏனெனில் அண்டம் முழுமைக்கும் இவை விரவியுள்ளன.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) அரசாங்கத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அறிவியல் நிறுவனமான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவன கண்காணிப்பு அறிவியல் (ARIES) வானியலாளர்கள், மாறுபட்ட வயதுடைய நட்சத்திரங்கள் இந்த திறந்த நட்சத்திரத் தொகுப்புகளில் இணைந்து வாழக்கூடும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். திறந்த நட்சத்திரத் தொகுப்பில் உள்ள நட்சத்திரங்களுக்கு ஒரே வயது இருக்கும் என்ற முந்தைய ஆராய்ச்சி முடிவிற்கு சவாலாக அமைந்துள்ளது.
இமயமலையில் அமைந்துள்ள தேவஸ்தலில் 1.3 மீட்டர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மோசமாக ஆய்வு செய்யப்பட்ட மூன்று திறந்த நட்சத்திரத் தொகுப்புகளான NGC 381, NGC 2360 மற்றும் பெர்க்லி 68 ஆகியவற்றிலிருந்து பெறும் ஒளியைக் கொண்டு நட்சத்திரத் தொகுப்புகளில் உள்ள நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தனர். NGC 2360 கிளஸ்டரில் இரண்டு வெவ்வேறு ஸ்டெல்லார் பரிணாம வரிசைகளை அவர்கள் கண்டறிந்தனர், இது பால்வெளி மண்டலத்தில் இன்று வரை மிகக் குறைந்த அளவிலான திறந்த நட்சத்திரத் தொகுப்புகளில் மட்டுமே காணப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு:Dr. Yogesh Chandra Joshi (yogesh@aries.res.in) தொடர்பு கொள்ளலாம்)
(Release ID: 1633281)
Visitor Counter : 202