அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இயற்கையின் அடிப்படையை அறிந்துகொள்ள உதவும் கருந்துளைகள் மற்றும்

புவியீர்ப்பு அலைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளை, கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கம், ஊக்குவித்துள்ளது.

Posted On: 21 JUN 2020 5:47PM by PIB Chennai

கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின்( Indian Association for the Cultivation Of Science. – IACS),  இயற்பியல் அறிவியல் கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் பள்ளிகளைச் சேர்ந்தவரும்மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின்  இன்ஸ்பையர் (INSPIRE) விருதுபெற்றவருமான டாக்டர் சுமந்தா சக்கரவர்த்தி, கருந்துளைகளின் வெப்ப இயக்கவியல் தன்மை பற்றி ஆய்வு செய்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளார்.   அவரது    கோட்பாடுகள்  மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திகருந்துளைகள் மற்றும் அதன்  பல்வேறு வகைகள் பற்றி  தற்போது  பகுப்பாய்வு நடத்தப்பட்டு வருகிறது

டாக்டர் சக்கரவர்த்தியின் ஆராய்ச்சிப் பணிகளில்தொடக்கத்தில் புவியீர்ப்பு இயற்பியல் மற்றும்  குறிப்பாக கருந்துளைகள் பற்றி  கவனம் செலுத்தப்பட்டது.

புவியீர்ப்பு அலைகள் குறித்த வானியல் மற்றும் கருந்துளைகளின் நிழல் அளவீடு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைபுவியீர்ப்புக் கோட்பாடுகளைப் பற்றி மேலும் தெளிவாக  அறிந்துகொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.   இதன் அடிப்படையிலான அவரது பணிகள்,   அளவுரு இடத்தை வரையறுப்பதுடன் மட்டுமின்றிதொடர் ஆய்வுகள் நடத்துவதற்கான வழிகாட்டு கொள்கைகளாகவும் அமையும்

இன்ஸ்பையர் ஆராய்ச்சி உதவித்தொகை  பெற்ற காலத்தில், அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிப் பணிகள்தேசிய மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது

கூடுதல் விவரங்களுக்கு டாக்டர்.சுமந்தா சக்கரவர்த்தியை (sumantac.physics[at]gmail[dot]com) தொடர்புகொள்ளவும்.  


(Release ID: 1633279) Visitor Counter : 157