பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான (RLBs) 15வது நிதிஆணைய மானியத்தின் முதல் தவணை வழங்கப்பட்டது

Posted On: 19 JUN 2020 8:35PM by PIB Chennai

2020-21ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையை 15வது நிதிஆணையம் (XV FC) தாக்கல் செய்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான, இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதுஇதைத் தெரிவித்த மத்திய வேளாண் மற்றும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், 2020-21ஆம் நிதியாண்டுக்கான மொத்த மானிய அளவாக  ரூ.60.750 கோடிக்கு நிதி ஆணையம் திட்டம் வகுத்தது என்றும், இது ஒரே ஆண்டில் நிதிஆணையம் பரிந்துரைந்த மிகப் பெரிய ஒதுக்கீடு எனவும் கூறினார்.

28 மாநிலங்களில், 5வது மற்றும் 6வது பிரிவில் உள்ள பாரம்பரிய அமைப்புகள் உட்பட   பஞ்சாயத்து அமைப்புகளின் அனைத்து அடுக்குகளுக்கும், இரண்டு பகுதிகளாக (i) அடிப்படை மானியம் மற்றும் (ii) இணைப்பு மானியம் வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மானியத்தில் 50 சதவீதம் அடிப்படை மானியமாக இருக்கும் மற்றும் 50 சதவீதம் இணைப்பு மானியமாக இருக்கும். அடிப்படை மானியம் ஒருங்கிணைந்தது. அதை சம்பளம் மற்றும் இதர நிறுவனச் செலவுகள் தவிர  குறிப்பிட்ட இடங்களில் செய்ய வேண்டிய தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்இணைப்பு மானியத்தை (a) துப்புரவு மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாமல் ஆக்குவதற்கான பராமரிப்பு (b) குடிநீர் சப்ளை, மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும்இணைப்பு மானியத்தின் ஒரு பாதியை, இந்த இரண்டு முக்கியமான சேவைகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தலாம். ஆனாலும், ஒரு பிரிவின் தேவை முழுவதும் நிறைவேறினால், இதர பிரிவுகளுக்கு அந்த நிதியை ஊராட்சி அமைப்புகள் பயன்படுத்தலாம்

15வது நிதிஆணையத்தின் மானியங்களை, அதன் பரிந்துரைப்படியும், மாநில நிதிஆணையத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் படியும்  பஞ்சாயத்துகளின் அனைத்து அடுக்குகளுக்கும் - கிராமம், வட்டாரம் மற்றும் மாவட்டம் மற்றும் 5 மற்றும் 6வது பாரம்பரியப் பகுதிகளுக்கு மாநில அரசுகள் வழங்கும்.  

கிராமப் பஞ்சாயத்துகளுக்கு - 70 முதல் 85 சதவீதம்

வட்டார மற்றும் நடுத்தரப் பஞ்சாயத்துகளுக்கு - 10 முதல் 25 சதவீதம்.

மாவட்ட/ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு  - 5 முதல் 15 சதவீதம்.

கிராம மற்றும் மாவட்டப் பஞ்சாயத்துக்கு என இரண்டு அடுக்குகள் கொண்ட மாநிலங்களில், இந்தப் பங்களிப்பு கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு 70 முதல் 85 சதவீதமாகவும், மாவட்ட/ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு 15 முதல் 30 சதவீத மாகவும் இருக்கும்.

மேலும் தகவல்கள் அளித்த திரு தோமர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, மானிய உதவியாக ரூ.15187.50 கோடியை, 28 மாநிலங்களில் உள்ள 2.63 லட்சம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் ஜூன் 17, 2020ஆம் தேதி வழங்கியுள்ளது. இந்த மானிய உதவி, 2020-21ஆம் ஆண்டுக்கு 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்த ஒருங்கிணைந்த மானியத்தின் ஒரு பகுதியாகும். இவை குறிப்பிட்ட பகுதிகளின் தேவைகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் பயன்படுத்தப்படவுள்ளன.

கோவிட் தொற்றுக்கு எதிராகப் போராடும் சவாலான  நேரத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என திரு தோமர் கூறினார்.

ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, அவர்களின் திறனுக்கு ஏற்ப வேலை வழங்கவும், சவால்களை கிராமப் பஞ்சாயத்துகள் எதிர்கொள்ளும் அளவுக்கு சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், பஞ்சாயத்துபவன்களின் 50 சதவீத செலவை நிதி ஆணையத்தின் நிதி மூலமாகவும், மீத 50 சதவீத செலவை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.20 லட்சத்திலிருந்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கூறினார். கிராமப் பஞ்சாயத்துகளிடம் 14வது நிதிஆணையத்தின் மானியம், ஏதேனும் செலவழிக்கப்படாமல் மிச்சம் இருந்து, அது பஞ்சாயத்து பவனின் 50 சதவீத செலவுக்குப் போதவில்லை என்றால், பற்றாக்குறைப் பணத்துக்கு, 2020-21ஆம் ஆண்டுக்கு 15வது நிதிஆணையம் ஒருங்கிணைந்த மானியத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள பொதுக் கட்டிடங்கள், ஆரம்ப/மேல்நிலை/நடுநிலைப்பள்ளிகள், சுகாதார மையங்கள், விதைகள் மற்றும் உரங்கள் விற்கும் கூட்டுறவுக் கடைகள் ஆகியவற்றின் பழுது மற்றும் பராமரிப்புக்கும், 15வது நிதிஆணையத்தின் மானியத்தை கிராமப் பஞ்சாயத்துக்கள் பயன்படுத்தலாம். கிராம சுயஉதவிக் குழுக்களுக்கு அனுமதிக்கப்பட்ட இதர பணிகள் மேற்கொள்வதற்கு (அதிகபட்சம் ரூ.15லட்சம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதியுடன் நிதி ஆணையத்தின் நிதியை கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விரிவான கடிதத்தை தலைமைச் செயலாளர்களுக்கு பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அனுப்பியுள்ளார்.

கொவிட்-19 தொற்று சூழ்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் 38,000 தனிமை மையங்கள், பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிருமிநாசினி தெளித்தல், கொவிட் தொற்று நிர்வாகத்துக்கு கிராமத் தன்னார்வலர்களை நியமித்தல், சமூக இடைவெளியைக் கட்டாயமாக்கியது, மருத்துவ முகாம்கள் நடத்தியது, வெளியிடங்களில் இருந்து வரும் நபர்களைக் கண்காணிப்பது, தனிமை மையங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, வீடு வீடாகப் பிரசாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது, கை கழுவதல் குறித்து பிரசாரம் செய்தது, முகக்கவசம் தயாரிப்பில் சுயஉதவிக் குழுக்களை ஈடுபடுத்தியது, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்தது, உள்ளூர் வேலைவாய்ப்பு வழங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளைத் தொடங்கியது போன்ற தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக அமல்படுத்தியதை சுட்டிக்காட்ட வேண்டியது பொருத்தமாக இருக்கும். புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளதை முன்னிட்டுபஞ்சாயத்து அமைப்புகளின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திட்டமிடுதல், கண்காணிப்பு, கணக்கு/தணிக்கை போன்ற பணிகளுக்கு இணைய/தகவல் தொழில்நுட்ப வசதிகள் வழங்க 15வது நிதிஆணையத்தின் மானியத்தைப் பயன்படுத்துவதற்கும், ஒவ்வொரு ஊரக உள்ளாட்சி அமைப்பிலும் பணப்புழக்கம் இருப்பதற்கும் மாநிலங்களை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தீவிரமாக ஆதரிக்கும்.  



(Release ID: 1633106) Visitor Counter : 2918