நித்தி ஆயோக்

புதுமைகளைப் புகுத்துவது மற்றும் தொழில் முனைவோருக்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் (CIL) நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கம் இணைந்து செயல்பட உள்ளது.

Posted On: 20 JUN 2020 3:01PM by PIB Chennai

கோல் இந்தியா லிமிடெட் (CIL)  நிதிஆயோக் அமைப்பின் அடல் புதுமை இயக்கத்தின் (AIM) திட்டத்தில் இணைந்து செயலாற்ற ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளும் புதுமைகளைப் புகுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தக் கொள்கை உத்தி அளவிலான நோக்க அறிக்கை 19 ஜூன் 2020 வெள்ளிக்கிழமையன்று மெய்நிகர் மாநாட்டின் போது, அடல் புதுமை இயக்கம் அமைப்புக்கும், கோல் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.

 

இந்த ஒருங்கிணைப்புத் திட்டம் மூலமாக புதுமைக்கான சூழலை மேம்படுத்துவது, பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆகியவற்றில் பல்வேறு செயல்பாடுகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.

 

அடல் புதுமை இயக்கத்தின் இயக்குர் திரு.ஆர்.ரமணன், கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குர் திரு.பினய் தயாள் ஆகியோர் கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குருமான திரு பிரமோத் அகர்வால் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

 

அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடங்களை தத்தெடுத்துக் கொள்ளுதல்; ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்; டிங்கரிங் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவி செய்தல்; போன்ற பல்வேறு பிரிவுகளில் இணைந்து பணியாற்றுவதற்கு இந்த அறிக்கை வகை செய்கிறது.


(Release ID: 1632965) Visitor Counter : 378