சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho ApnaDesh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் 33 ஆம் தொடர் -: ‘சவாலான சமயங்களில் யோகாவும் உடல் நலமும்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது

Posted On: 20 JUN 2020 2:49PM by PIB Chennai

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho ApnaDesh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் 33ஆம்  தொடர், ‘சவாலான சமயங்களில் யோகாவும் உடல் நலமும்’ என்ற தலைப்பில், 19 ஜூன் 2020 அன்று நடைபெற்றது.

 

சுவாசத்தை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்தமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக யோகா பயன்படும் என்பதை எடுத்துக் கூறும் வகையில் யோகாசனத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் நோய் வராமல் தடுக்கவும், நோயைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடியது யோகாசனம். ஒரே பாரதம் உன்னத பாரதம் - ஏக் பாரத் ஸ்ரேஷ்டபாரத் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்கூறும் ஒரு முயற்சியாக பாருங்கள் நமது தேசத்தை என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

 

19 ஜூன் 2020 அன்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் சர்வதேச யோகா பயிற்சியாளரும் ஆன்மீக குருவுமான யோகா குரு பரத் தாக்கூர்தேவ் சன்ஸ்கிருதி விஸ்வ வித்யாலயாவின் ப்ரோ துணைவேந்தர் டாக்டர் சின்மயி பாண்டியா, நாடி விஞ்ஞானத்தில் நிபுணரான டாக்டர் லட்சுமி நாராயணன் ஜோஷி ஆகியோர் உரையாற்றினர். நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியுடன், அழுத்தங்கள் ஏதுமற்ற வாழ்க்கையை வாழ யோகா நமக்கு எவ்வாறு உதவுகிறது என்று அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

 

உலகில் யோகாசன மையமாக ரிஷிகேஷ் திகழ்கிறது என்று டாக்டர் லக்ஷ்மி நாராயண் அறிமுக உரையாற்றினார். ஆயுர்வேதத்தில் பிரபலமான நாடி வைத்தியம் குறித்தும் அவர் உரையாற்றினார். சமஸ்கிருதத்தில் நாடி என்றால் குழாய் என்று பொருள். இதை சேனல் என்றும் கூறலாம் இவை சக்தி வழங்கும் சேனல்கள். இவற்றின் மூலமாகப் பிராணன் என்கிற உயிரை வழி நடத்தும் சக்தி எடுத்துச் செல்லப்படுகிறது என்று நம்பப்படுகிறது. நாடிச் சக்கரங்கள் என்று சொல்லப்படும் உடலில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளில் இவை இணைகின்றன. உடலில் 72,000  நாடிகள் உள்ளன. இவற்றுள் ஏழு நாடிகள் மிகவும் முக்கியமானவை. இந்த ஏழு நாடிகளில் மூன்று நாடிகள் மிக இன்றியமையாதவை. முதுகெலும்பின் அடித்தளத்திலிருந்து தலை வரையிலும், இடா என்பது இடப்பக்கத்திலும், சுஷும்னா என்பது மையத்திலும், பிங்களா என்பது வலப்பக்கத்திலும் உள்ள மூன்று முக்கிய நாடிகளாகும். யோகாசனத்தில் இந்த நாடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சத் கர்மாக்கள், முத்ரா,  பிராணாயாமம் போன்றவை இந்த நாடிகளைத் திறக்கவும்,  அடைப்பைத் திறக்கவும் வகை செய்யும்., உடலை சரியான முறையில் வைத்திருத்தல், எல்லா சேனல்கள் வழியாகவும் உடலில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் நாடி வைத்தியத்தால் செய்ய முடியும்.

 

மத்திய சுற்றுலா அமைச்சகத்தில்  பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடரின் அடுத்த கருத்தரங்கில் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் ஒரு உரையாடல் நடைபெறும் இதற்கான தலைப்பு இந்தியா ஒரு கலாச்சாரப் புதையல் 20 ஜூன் 2020 மதியம்2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பட்டேல் மற்றும் 5 நிபுணர்கள் இந்த கருத்தரங்கில் முன்னிலை வகிப்பார்கள்.

இந்தத் தொடரை வியத்தகு இந்தியா சமூக வலைதளம் முகநூல் facebook.com/incredibleindia/  யூடியூப் Youtube.com/incredibleindia ஆகியவற்றில் காணலாம்

**************


(Release ID: 1632942) Visitor Counter : 177