சுரங்கங்கள் அமைச்சகம்

சுரங்கத்துறை மேம்பாட்டில் சுயசார்பு இந்தியா உருவாவதற்கான ஆராய்ச்சி வளர்ச்சி இணையதளம் ஒன்றை திரு பிரகலாத் ஜோஷி துவக்கிவைத்தார்.

Posted On: 19 JUN 2020 6:45PM by PIB Chennai

சுரங்கத்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அறிவியல் தொழில் நுட்பத் திட்டத்திற்கான, சத்தியபாமா (Science and Technology Yojana for Aatmanirbhar Bharat in Mining Advancement) என்ற இணையதளத்தை, மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி 15 ஜூன் 2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் சுரங்கத் தகவல் பிரிவின் நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் மூலமாக வடிவமைத்து செயல்படுத்தப்படுகிறது.. சுரங்க அமைச்சகத்தின் செயலர் திரு சுசில்குமார், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

 

நாட்டில் சுரங்கம், தாதுப்பொருள்கள் துறைகளில், ஆராய்ச்சி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறினார். சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில், புதுமையான, தரமான, ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுரங்கம் மற்றும் தாதுப்பொருள்கள் துறையில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

தற்போது ஆராய்ச்சித் திட்டங்களுக்கான அறிக்கைகள் விஞ்ஞானிகள்/ ஆராய்ச்சியாளர்களால் நேரில் சமர்ப்பிக்கப்படுகிறது சத்யபாமா இணையதளத்தின் மூலம் திட்டங்களை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்க முடியும். திட்டங்களைக் கண்காணிப்பது, நிதி மற்றும் மானியங்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை குறித்த தகவல்களும், இந்த இணையதளத்தில் இருக்கும்.

 

சத்யபாமா இணையதளத்தை இங்கே காணலாம் research.mines.gov.in. த்திட்டம் குறித்து மேலும் தகவல் அறிய மத்திய சுரங்க அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளலாம் met4-mines@gov.in.

 

********(Release ID: 1632739) Visitor Counter : 21