புவி அறிவியல் அமைச்சகம்

ஜூன் 21-ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை முன்னேற வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 18 JUN 2020 8:54PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:  

  • தற்போதைய வானிலை நிலவரப்படி, ஜூன் 21-ஆம் தேதி வரை தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதற்குப் பிறகு, இது உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள், மேற்கு இமாலயப்பிராந்தியத்தின் சில பகுதிகளில்,  ஜூன் 22-24-ல் மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
  • ஜூன் 25-ம் தேதி வாக்கில், தென்மேற்குப் பருவமழை, தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட ஹரியானாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தென்மேற்குப் பருவமழையின் வடஎல்லை, கண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரெய்சென், கஜூராஹோ, ஃபதேபூர், பரேஜ் வழியாக தொடர்ந்து செல்லும்.
  • வடமேற்கு இந்தியப் பகுதிகளில் (உத்தராகண்ட் தவிர) அடுத்த நான்கு ஐந்து தினங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

*******


(Release ID: 1632553) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi