அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய கடற்படை உருவாக்கியுள்ள நவ்ரக்ஷக் தனிநபர் பாதுகாப்பு கவச உடையை உற்பத்தி செய்ய ஐந்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உரிமம்

Posted On: 18 JUN 2020 5:06PM by PIB Chennai

தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம், நவ்ரக்ஷக் எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கவச உடையை உற்பத்தி செய்வதற்கு ஐந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, வதோரரா, மும்பையைச் சேர்ந்த இந்த ஐந்து உற்பத்தியாளர்களும் ஆண்டுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில், கவச உடைகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர். நவ்ரக்ஷக் தனிநபர் பாதுகாப்பு கவச உடையை, இந்திய கடற்படை மும்பை அஸ்வினி மருத்துவமனையின் கடற்படை மருத்துவ நிறுவனத்தின் புத்தாக்க மையம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த உடையை, பாதுகாப்பு வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து, சான்றளித்துள்ளது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1632338

-----(Release ID: 1632546) Visitor Counter : 172